சீக்கிரமே சினிமாவில் என் திறமையைப் பார்க்கலாம்-நாம் இருவர் நமக்கு இருவர்’ அஷ்ரிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் அஷ்ரிதா. மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அஷ்ரிதா தன்னை பற்றி இவ்வாறு சொல்கின்றார்:

`எங்க பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவர். தாஸ்னு சொன்னால் எல்லோருக்கும் தெரியும். நான் பத்தாவது படிச்சுட்டிருக்கும்போது இறந்துட்டார்.

அவர் மூலமா, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைஞ்சுட்டேன். `அப்பா அம்மா’ என்கிற அந்த சீரியல்தான் என் அறிமுகம். இத்தனை வருஷமா மீடியாவில் பயணிக்கிறது எளிதான விஷயமில்லை.

எனக்கு சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையலை. அந்த நேரங்களில் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். இப்போ, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியா இருக்கேன். நிறைய படங்களில் சில கதாபாத்திரங்களில் நடிச்சேன். இப்போ, செகண்ட் லீட் ரோல் கேரக்டர்களுக்குப் பேசிட்டிருக்கேன். சீக்கிரமே சினிமாவில் என் திறமையைப் பார்க்கலாம்” என்கிற அஷ்ரிதா, `

நாம் இருவர் நமக்கு இருவர்’ பக்கம் சொல்கிறார்.

அந்த சீரியலின் இயக்குநர், சின்ன வயசிலிருந்தே என்னைப் பார்த்துட்டிருக்கார். என் திறமை அவருக்கு நல்லாத் தெரியும். நான் குழந்தை நட்சத்திரமா இருந்தப்போ, என்னைத் தூக்கிட்டு `பாப்பா’ எனப் பாசம் பொழிந்த டைரக்டர்ஸ் பலரும் இப்பவும் என்னைக் குழந்தையா நடத்தறாங்க.

என் அப்பா இப்போ இல்லைன்னாலும், அவர் எனக்கு வழிகாட்டிக் கொடுத்தமீடியா பயணத்தை என் இறுதி மூச்சு வரை தொடரணும். அதுதான் என் ஆசை. அப்பா இறந்ததுக்கு அப்புறம் கேமராதான் என் அப்பா. எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன்.

முதல் சீரியலில் `நாகேஷ்’ தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது. அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல; மிகப்பெரிய ஜீனியஸ். அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரியவைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்” எனச் சிலிர்க்கிறார் அஷ்ரிதா.

 

(Visited 43 times, 1 visits today)

Post Author: A Rajeevan