கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை : ‘எக்ஸ் வீடியோஸ்’ அக்ரிதி சிங்

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார் எக்ஸ் வீடியோஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நடிகை அக்ரிதி சிங்.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி, கடந்தவாரம் ரிலீசான படம் ‘எக்ஸ்- வீடியோஸ்’. சஜோ சுந்தர் என்பவர் இயக்கியுள்ள இப்படம், ஆபாச படங்கள் உருவாக்கப்படுவதற்கான பின்புலத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியைப் பற்றி பேசுகிறது.

இப்படத்தின் நாயகி அக்ரிதி சிங், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ரிதி    தெரிவித்துள்ளதாவது

பாலிவுட்டுக்கு, தமிழ் சினிமாவுக்கு நிறையே வேறுபாடுகள் இருக்கின்றன.

இங்கு வேலை பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. இங்குள்ளவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எனக்கு மொழி பிரச்சினை இருந்தது. வசனம் பேசுவது உள்ளிட்டவைகளை சமாளிக்க எல்லோரும் எனக்கு உதவி செய்தார்கள்.

எனது இயக்குனர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், சக நடிகர்கள் உள்பட அனைவருமே எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

இந்த படம் ஆபாசம் சம்பந்தப்பட்டது என்பதால், இதில் நிர்வாணக் காட்சிகளில்.. இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இது ஆபாச படம் இல்லை. இது ஒரு சமூக பிரச்சினை சார்ந்த திரில்லர் படம். சமூகத்தில் நடக்கும் குற்றங்களை பற்றி தான் படத்தில் காட்டியுள்ளோம். இதில் ஆபாசம் இல்லை. நிச்சயமாக குடும்பத்துடன் சென்று படம் பார்கலாம்.

ஆபத்து தெரியாமல் எடுக்கப்படும் வீடியோக்கள், வெளிய கசிந்து எப்படி ஒரு குடும்பத்தை பாதிக்கிறது என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். கட்டாயம் என்ன? நீங்கள் கேள்வியை சரியாக புரிந்துகொள்ளவில்லை..

ஆபாசத்துக்கு எதிராக எடுக்கப்படும் படத்தில் நிர்வாணக்காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஒரு நடிகையாக அந்த கதாபாத்திரத்திற்கு தேவையானதை நான் செய்ய வேண்டும். கதைக்கு வேதைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த படத்தில் நான் அப்படி நடித்ததற்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்கிறது. இதை நான் செய்யவில்லை என்றால், இந்த படத்தை எடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான்.

(Visited 133 times, 1 visits today)

Post Author: A Rajeevan