வாயை பிளக்க வைத்த ஸ்டார் இந்தியாவின் வருமானம்…..!

நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது எல்லோராலும் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசாலமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மற்றும் இறுதி போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை சென்னை அணி தம் வசப்படுத்தியது.

அந்த வகையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்த ஸ்டார் இந்தியா நிறுவனம் விளம்பரத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட இலாப தொகை எவ்வளவு என்பதை எக்ஸ்சேஞ் 4 மீடியா என்ற வணிக இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ காணொளி இணையத்தளமான ஹொட்ஸ்டாரில் மாத்திரம் ஒரே நேரத்தில் சுமார் 10 மில்லியன் பேர் நேரடியாக பார்த்துள்ளனர். இணையத்தளம் ஒன்றில் 10 மில்லியன் பேர் நேரடி ஒளிபரப்பை பார்த்த முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

இதன்படி ஐ.பி.எல். தொடருக்கான விளம்பரத்தின் ஊடாக மாத்திரம் சுமார் 1900-2000 கோடி ரூபா வருமானத்தினை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 300-350 கோடி ரூபா ஹொட்ஸ்டாரின் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

(Visited 106 times, 1 visits today)

Post Author: metronews 3