ஐபிஎல் மூலம் தேசிய அணியில் களமிறங்கி பாகிஸ்தானை மிரட்டிய பாட்லர்……!

ஐபிஎல் தொடரில் இறுதி தகுதிச் சுற்றும் வரையும் ராஜஸ்தான் ரோயல்ஸ் தாக்குபிடித்தது, எல்லோருக்கும் தெரிந்ததே.

அந்தவகையில் அவ்வணியின் ஜாஸ் பெட்லர் அருமையான இன்னிங்ஸை வெளிப்படுத்திருந்தார்.

ஐபிஎல் தொடரில் அசத்தியது தான் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வாக முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் விளையாடினார்.

அதில் 13 போட்டியில் 548 ஓட்டங்களை அவர் குவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பட்லர் இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பட்லர்.

இது குறித்து பேசிய பட்லர், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட விதம் எனக்கு அதிக தன்னம்பிக்கை அளித்தது .

இதில் சிறப்பாக செயல்பட்டதே தேசிய அணியில் நான் இடம்பிடிக்க காரணம், என்னைப்பொறூத்த வரையில் எந்த கலர் பந்தில் விளையாடுகிறோம் என்பதில் முக்கியமல்ல எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம் என கூறியுள்ளார்.

(Visited 43 times, 1 visits today)

Post Author: metronews 3