கினிகத்தேனையில் கொள்ளை; என்ன இத்தனை இலட்சமா….?

(க.கிஷாந்தன்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் 07.06.2018 இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் சிறிய தொகை காசும், ஒரு வீட்டில் மாத்திரம் சுமார் ஆறு லட்சத்து 50000 ரூபா காசு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

 

கட்டிட பொருட்கள் கொண்ட கடையுடன் கூடிய குறித்த வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது ஜன்னல் கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளதாகவும், பணத்தை எடுத்துக்கொண்டு திருடர்கள் அதே ஜன்னல் வழியில் வெளியில் செல்லும் போது வீட்டில் சத்தம் வருவதை கேட்டு நித்திரை விட்டெழுந்து பார்த்த போது பணத்தை திருடிச் செல்வதை உணர்ந்ததாகவும் களவாடப்பட்ட வீட்டில் உள்ள ஒருவர் தெரிவித்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தினை மீட்டு சந்தேக நபரை கைது செய்வதற்காக ஹட்டன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 155 times, 1 visits today)

Post Author: metronews 3