பிக்பாஸ் 2 போட்டியாளர்களே… இப்போ புரியாது… வீட்டுக்குள்ள போங்க, தெரியும்!” – ஹரிஷ் கல்யாண்

சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் `பிக் பாஸ்’ மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஹரிஷ் கல்யாண், தற்போது `பியார் பிரேமா காதல்’ மூலம் சினிமாவில் கம்பேக் கொடுக்கவிருக்கிறார். பிக் பாஸ் சீஸன் 2 தொடங்கவிருக்கும் நிலையில், பிக் பாஸ் அனுபவம் குறித்தும், அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளது வருமாறு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம்தான் வாழ்க்கையே நல்லா இருக்கு. வெளியே போகும்போது மக்களுக்கு நான் யார்னு தெரிஞ்சிருக்கு. படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்த அனுபவம் நிறைய பாடங்களைக் கத்துக்கொடுத்துருக்கு.

நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நடந்துகிட்ட விதம் என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் பிடிச்சிருந்தது. பழகுற எல்லோருக்கும் நான் எந்தெந்த விஷயத்துக்கு எப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணுவேன்னு தெரிஞ்சுக்க பிக் பாஸ் ஒரு வாய்ப்பா இருந்தது.

வெளிய வந்ததுக்குப் பிறகு எல்லாரும் என்னைப் பாராட்டினாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துகிட்ட போட்டியாளர்கள்கூட நான் நல்ல ஃபிரெண்டா இருக்கேன்!

பிக் பாஸ்ல எங்களை வழிநடத்துற ஒருத்தராதான் கமல் சார் இருந்தார். நாங்களும் அவருக்குப் பெரிய மதிப்பு கொடுத்தோம். `நான் பிக் பாஸ் கிடையாது. மக்கள்தான் இங்கே பிக் பாஸ்.

நான் உங்களுக்கும் மக்களுக்கும் இடையில இருக்கிற பாலம்’னு அடிக்கடி சொல்வார். அவர் கட்சி ஆரம்பித்தது குறித்தும், பரபரப்பா சமூக விஷயங்கள்ல ஈடுபடுறது குறித்தும் அவரோட ட்விட்டர்ல அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கார். பிக் பாஸ்ல கொஞ்சம் அரசியல் பேசிக்கிட்டு இருந்த கமல் சார், இப்போ முழுநேர அரசியலுக்கு வந்திருக்கார். அவ்வளவுதான்.”

போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள் மட்டும்தான். எந்தவொரு அட்வைஸும் கொடுக்கமாட்டேன். இப்போ என்ன சொன்னாலும் அவங்களுக்குப் புரியாது. ஸோ, எந்தவொரு மைண்ட் செட்டையும் வளர்த்துக்காம போறது நல்லது. உண்மையா நடந்துகோங்க. 100 நாள் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. யார் எந்த அறிவுரை சொன்னாலும் எடுத்துக்காதீங்கனுதான் சொல்வேன். நாங்க ஏற்கெனவே உள்ளே இருந்துருக்கோம். அதனால, எங்களுக்கு எல்லாம் தெரியும்னு சொல்றது வேஸ்ட்.”

 

 

(Visited 86 times, 1 visits today)

Post Author: A Rajeevan