தாமரை கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தமிழ் இளைஞர் பலி………!

தாமரைகோபுர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சற்றுமுன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

மின் உயர்த்தியில் மேலே செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி சடலமானது பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 226 times, 1 visits today)

Post Author: metronews 3