விஜய் டிவியின் பிரபலம் மிமிக்ரி நவீன் செய்த காரியம்; 2ஆவது திருமணத்தால் ஏற்பட்ட பரபரப்பு….!

கலக்கப்போவது யாரு புகழ் நவீனின் இரண்டாவது திருமணத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியூடாக மிமிக்கிரி கலைஞனாக வலம் வந்தவர் நவீன். சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன்(35). கமல் ஹாஸன், அஜித், விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று பேசி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

அவர் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை நேற்று முன்தினம் (10.06.2018)  திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த திருமணத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது தனது முதலாவது மனைவி என கூறும் திவ்யா என்ற பெண் மணி, நவீன் தன்னை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக திவ்யா (28) என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு முறைப்படி பதிவுத் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் பொலிஸாரிடம் அளித்தார். தனக்

திவ்யா அளித்த ஆதாரங்களின் மூலம் பொலிஸார் நவீனின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த மண்டபத்திற்கு உடனே விரைந்தனர்.  திருமணத்தை நிறுத்திவிட்டு நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

முதல் மனைவி இருக்கும்போதே நவீன் 2 ஆவது திருமணம் செய்ய முயன்று பொலிஸாரால் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி பிரபலம் சுனிதா கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில் நவீனும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

நவீனுக்கும், திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்களாம். இந்நிலையில் தான் நவீன் 2ஆவது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

(Visited 138 times, 1 visits today)

Post Author: metronews 3