கோஹ்லி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் இடையில் இன்னொருவர் அறிமுகம்…..!

இன்றைய சூழ்நிலையில் பிரபலங்கள் என்ன செய்தாலும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதே அவர்களது முதல் வேலையாக இருக்கும்.

தற்போது ரசிகர்களிடையே மிக பிரபல்யமான தம்பதியாக வலம் வருகிறார்கள் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா. இவர்கள் என்ன செய்தாலும் அதை உற்று நோக்க ஒரு கும்பல் இருந்து கொண்டே இருக்கின்றது.

இதன்போது இந்த இளம் ஜோடி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளது.

கோஹ்லி மற்றும் அனுஷ்கா இருவருமே கையில் ஒரு அழகான நாய் குட்டியை தூக்கி வைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அதில் ஹார்ட் எமோஜி போடப்பட்டுள்ளது. வெளியிட்ட 15 மணி நேரத்திலேயே 21 லட்சத்திற்கும் அதிக லைக்ஸ்களை வாங்கி குவித்தது இந்த போஸ்ட்.

முன்னதாக, அனுஷ்காவுடன் கோஹ்லி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இணைந்து உடற்பயிற்சி செய்வது இன்னும் நல்லது என கூறியதோடு, அனுஷ்காவை பாஸ் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 162 times, 1 visits today)

Post Author: metronews 3