மேடையில் நடனமாட அஞ்சிய மகளுடன் சேர்ந்து ஆடிய தந்தை – வைரலாகும் வீடியோ

பள்ளி கலைநிகழ்ச்சியின் போது மேடையில் நடனமாட பயந்து அழுத மகளை சமாதானப்படுத்த மகளுடன் சேர்ந்து தந்தையும் நடனமாடிய வீடியோ அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி நிகழ்ச்சியில் சிறுமிகள் நடனம் ஆட வரிசையாக நிறுத்தப்பட்டனர். அப்போது அதில் ஒரு சிறுமி மேடையை பார்த்து பயந்து போய் அழுதாள். நடனமாடி மறுத்து ஒரே இடத்தில் நின்று விட்டாள். இதனால் நடனம் பாதியில் கெட்டது.

அப்போது திடீரென கைக்குழந்தையும் மேடைக்கு வந்த குழந்தையின் தந்தை அவள் அருகில் சென்று ஆடக்கூறினார். ஆனால் அவள் ஆடவில்லை. அவள் கையை பிடித்து ஆட வைத்தார். பின்னர் அவளுடன் இணைந்து ஆட தொடங்கினார். தந்தை ஆடுவதை கண்ட சிறுமி மகிழ்ச்சியான ஆடினார். நடனம் முடியும் வரை தந்தை மகளுடன் இணைந்து கைக்குழந்தையுடன் ஆடிய சம்பவம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது.

மகள் நடனத்தை மறக்காமல் தந்தை இணைந்து ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது

(Visited 36 times, 1 visits today)

Post Author: A Rajeevan