போதை மாத்திரைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுடன் ஒருவர் கைது; இருவர் தப்பியோட்டம்…..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடல்அட்டை, உயிர்காக்கும் மருந்துகள் போன்றவை கடத்திச் செல்லப்படுகிறது.
கீழக்கரை பகுதி பொலிஸாரின் அலட்சியப்போக்கு காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் கியூ பிரிவு பொலிஸார் நேற்று (11.06.2018) நள்ளிரவு சோதனையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 225 பாக்கெட் போதை மாத்திரைகள், மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்ததோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை மற்றும் மருந்து பொருட்களின் மதிப்பு 50 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களை செய்தியாளர்களுக்கு காட்ட பொலிஸார் மறுத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metronews 3