விபச்சார விடுதியில் ஆறு பெண்கள் உட்பட கையும் காலுமாக சிக்கினார் பிரபல சிங்கள நடிகை….!

விபசார நடவடிக்கைகளுக்காக தயாராக இருந்த பிரபல சிங்கள நடிகை ஒருவர் உட்பட 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா, கிடகம்முல்ல பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் மதுபான போத்தல்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நடிகை சிங்கள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து  கைது செய்யப்பட்ட பெண்கள் 30 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கூறப்பட்டது.  கம்பஹா நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கைது செய்த பெண்களை தேசிய வைத்தியசாலையின் சமூக நோய்கள் பிரிவில் பரிசோதித்து, அறிக்கையை எதிர்வரும் 18ஆம் திகதி நீதி மன்றத்தில் சமர்ப்பிக்குமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

(Visited 414 times, 1 visits today)

Post Author: metronews 3