கொழும்பில் இடம்பெற்ற கோர சம்பவம்; மாடியிலிருந்து கீழே வீழ்ந்து இளைஞர் பலி…..!

 

கொழும்பு மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் 5வது மாடியில் இருந்து விழுந்தே உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம், பஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த உபுல் குமார என்ற 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நித்திரை மயக்கத்தில் நடந்து சென்று சிறுநீர் கழிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் 5வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 112 times, 1 visits today)

Post Author: metronews 3