தேரர்கள் மீது துப்பாக்கி சூடு; கதிர்காமம் கிரிவெஹர விகாரையில் சம்பவம்…..!


கதிர்காமம்  கிரிவெஹர ரஜமகா விகாரையில்  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் விகாரையின் விகாராதிபதியான வணக்கத்துக்குரிய கோபாவாக தம்மிந்த தேரர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று (12.06.2018) இரவு 11 மணியளவில் ஜீப் ரக வாகனமொன்றில் வந்த மூன்று துப்பாக்கி தாரிகள் ரஜமகா விகாரையின் வளாகத்தினுள்ளே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த விகாரையின் விகாராதிபதியான தம்மிந்த தேரர் உட்பட மற்றுமொரு தேரரும் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் துப்பாக்கி தாரிகள் பயணித்த ஜீப் வாகனத்தை மீட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metronews 3