ஸ்கொட்லாந்தை தாறுமாறாக வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்…..!

 

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிற்கு ஸ்கொட்லாந்து சென்ற பாகிஸ்தான் அணி  எடின்பர்க் மைதானத்தில் நேற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடிப்பாட்டத்தை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதலிரண்டு விக்கட்டுகளும் 46 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும், அணித் தலைவர் என்ற பொறுப்புடன் ஆடிய சப்ராஷ் ஓட்டங்களை வேகமாக குவித்தார்.

மூன்று சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களை சப்ராஷ் அஹமட் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, அடுத்து களமிறங்கிய சொயிப் மலிக் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 27 பந்துகளுக்கு 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து பெரிய சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. முன்சே 25 ஓட்டங்களையும், கோட்ஷேர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 5.1 ஓவர்களில் 53 ஓட்டங்கள் பெறப்பட்டது.

எனினும் அடுத்துவந்த வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இறுதியில் அணிக்காக போராடிய பட்ஜ் 24 ஓட்டங்களையும், லீஸ்க் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தாலும், ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை  இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஷ் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.

(Visited 130 times, 3 visits today)

Post Author: metronews 3