இலங்கையில் தனக்கேற்பட்ட அவமானத்தை சுட்டிக் காட்டிய அரவிந்த் சாமி…..!

ஒரு காலத்தில் காதல் மன்னனாக, சாக்லெட் பாய் என்ற பல பட்டய பெயருக்கு சொந்தக்காரராக இருந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. தற்போது மக்களின் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றார். தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக உருவெடுத்து அவருக்கான புதிய இடத்தை பதித்தார். பல வித்தியாசமான படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

இவர் நடுவில் சில பிரச்சினைகளால் உடல் பருமன் பெற்றிருந்தார். அதன்பிறகு உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து இப்போது பிட்டாக இருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் உடல் எடையுடன் இருந்து நேரம் குழந்தைகளுடன் இலங்கை சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் என் மகளிடம் உன் அப்பாவை கொஞ்சமாக சாப்பிட சொல்லு என்றார்.

அவர் கூறியது எனக்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை ஆனால் என் மகள் சிறியவள், அவளுக்கு எப்படி இருந்திருக்கும். அதையெல்லாம் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்று பேசியுள்ளார்.

(Visited 183 times, 1 visits today)

Post Author: metronews 3