தீ பரவலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி……!

பதுளை – பசறை நகரில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும் தாய் ஆகியோரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 15 times, 1 visits today)

Post Author: metronews 3