புற நாட்டவர்களுடன் இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கான ஓர் முக்கிய செய்தி…..!

இணையத்தின் ஊடாக மக்கள் அவர்களுடைய அன்றாட செயற்பாடுகள் மற்றும் சுய விபரங்களை பகிர்வதன் மூலமாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக மக்களின் இச் செயற்பாடுகளினால் தான் நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைகளுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நிதி மோசடி தொடர்பில் பத்து முறைப்பாடுகள் இந்தாண்டில் இதுவரையில் பதிவாகியுள்ளன.

மேலும், இணையம் மற்றும் முகநூல் பயன்பாடு குறித்த 1100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதன்போது மக்களை எச்சரிக்கையாக செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 79 times, 1 visits today)

Post Author: metronews 3