பாண்டியராஜனுக்கு பட்டமளிப்பு; எதற்கு தெரியுமா….?

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் 1949 முதல் 2000ஆம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் (பி.எச்.டி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metronews 3