ஞானசாரருக்கு 1 வருட கடூழிய சிறைத்தண்டனை; நீதிமன்றம் அறிவிப்பு…..!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 1 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 1500 ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தமாக 3000 ரூபா அபராதத்தை தலா ஆறு மாத காலம் வழங்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி எக்னெலிகொடவின் மனைவிக்கு 50000 ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

(Visited 101 times, 1 visits today)

Post Author: metronews 3