பாலித ரங்கே பண்டாரவின் மகனை பிணையில் விடுவித்த நீதிமன்றம்….!

யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி, புத்தளம் – ஆராச்சிக்கட்டு பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.

கடந்த 8 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை , விபத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகனான யசோத ரங்கே பண்டாரவை பிணையில் செல்ல சிலாபம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்ததுடன், அவரது வாகன அனுமதிப் பத்திரத்தை அவரிடம் வழங்க மறுத்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Post Author: metronews 3