அமெரிக்க கார் நிறுவன நிதி அதிகாரியாகும் தமிழ்நாட்டுப் பெண்!

இந்தியாவின் சென்னை பல்கலைகழகத்தில் படித்த பெண் அமெரிக்காவின் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவுள்ளார்.

சென்னையில் பிறந்த திவ்யா சூர்யதேவரா (39 வயது). சென்னை பல்கலைகழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்துள்ளார்.

தனது 22 ஆவது வயதில் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. படிக்க, அமெரிக்கா சென்றார். 2005 இல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

உலகில் வேறு எந்தவொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்திலும் பெண் ஒருவர் தலைமை செயல் அதிகாரியாக இருக்கவில்லை. இதேபோல தலைமை நிதி அதிகாரியாகவும் ஒரு பெண் இருந்ததில்லை.

பின் 2017 இல் இந்நிறுவனத்தின் கோர்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா இருந்துள்ளார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் திகதி தலைமை நிதி அதிகாரி சக் ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறுகிறார். திவ்யா அந்த பொறுப்பை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 23 times, 2 visits today)

Post Author: metronews 3