சர்­வ­தேச மகளிர் தினம் இன்று

சர்­வ­தேச மகளிர் தினம் இன்று மார்ச் 8 ஆம் திகதி உல­கெங்கும் அனுஷ்­டி­க்கப்­ப­டு­கி­றது.


1789ஆம் ஆண்டில் பிரஞ்ச் புரட்­சியின் போது பெண்­களும் போராட்ட களத்தில் இறங்­கினர். சமத்­துவ உரி­மைகள் வேண்டும், வேலைக்கு ஏற்ற ஊதியம், பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை, பெண்கள் அடி­மை­க­ளாக நடத்தக் கூடாது என வலி­யு­றுத்தி  போரா­டினர். அதை அடக்க நினைத்த மன்னன் 16 ஆம் லூயி போராட்­டத்தின் வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் தோல்­வி­யுற்றான். 1792 இல் பிரான்சு குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. பதி­னாறாம் லூயியும் அவனின் மனைவி மரீ அண்­டோ­னெட்டும் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு கில்­லட்டின் தலை­வெட்டு எந்­தி­ரம்­மூலம் கொல்­லப்­பட்­டனர். 

Step_It_Up_IWD2016


இப்­போ­ராட்­டத்தின் வெற்றி ஐரோப்பா முழுக்க பெண்கள் போராட்டம் நடத்த உத்­வேகம் ஊட்­டி­யது. ஜேர்­மனி, ஆஸ்­தி­ரியா, டென்மார்க் ஆகிய நாடு­களைச் சேர்ந்த  பெண்­களின் தொடர் போராட்­டங்­களைக் கண்டு அரசு ஆடிப்­போ­னது. இத்­தா­லிய பெண்கள், வாக்­கு­ரிமை கேட்டு போரா­டினர். பிரான்ஸில் பிரஷ்­யனில்  இரண்­டா­வது குடி­ய­ரசை நிறு­விய லூயிஸ் பிளாங் பெண்­களை அர­சவை ஆலோ­சனைக் குழுக்­களில் சேர்க்­கவும் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கவும்  ஒப்­புக்­கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8.


பெண்­களின் போராட்டம் அமெ­ரிக்­கா­விலும் நடை­பெற்­றது. 1908ஆம் ஆண்டு வாக்­கு­ரிமை கேட்டு பெண்கள் பாரிய ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­தினர். 1909 பெப்­ர­வரி 28 ஆம்; திகதி நியூயோர்கில் அனைத்­துல உழைக்கும் மகளிர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.


1910ஆம், ஆண்டு  டென்மார்க் தலை­நகர் கொப்­பன்­ஹே­கனில் அனைத்­து­லக பெண்கள்  மாநாடு நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட ஜேர்­மனி சமூக ஜன­நா­யகக்  கட்­சியின் தலை­வி­யான லூயிஸ் ஸியெட்ஸ், ஒவ்­வொரு வரு­டமும் மகளிர் தினம் உலகம் முழு­வதும் ஒரே தினத்தில் அனு­ச­ரிக்­கப்­ப­ட­வேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரி­மைக்­காக குரல் கொடுக்க வேண்டும்  என்ற யோச­னையை முன்­வைத்தார். 


இந்த யோச­னையை ஜேர்மன் சமூக ஜன­நா­யகக் கட்­சியின் செயற்­பாட்­டாளர் கிளாரா ஸெட்கின் வழி­மொ­ழிந்தார்.  அத்­துடன் இந்த மாநாட்டில் கலந்­து­கொண்ட 17 நாடு­களைச் சேர்ந்த சுமார் 100 பெண்­களும் ஏக­ம­ன­தாக இந்த யோச­னையை வர­வேற்­றனர். 
பின்னர் சர்­வ­தேச மாதர் அமைப்பு உரு­வா­னது. இந்த அமைப்பின் சார்­பாக 1911ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி  முல் தட­வை­யாக சர்­வ­தேச மகளிர் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. டென்மார்க் ஆஸ்­தி­ரியா ஜேர்­மனி இன்னும் சில ஐரோப்­பிய நாடு­களின் பெண் பிர­தி­நி­திகள் முத­லா­வது சர்­வ­தேச மகளிர் தினத்தைக் கொண்­டா­டினர்.


இந்த கொண்­டாட்­டத்தின் போதுதான் மார்ச் 8 ஆம் திக­தியை சர்­வ­தேச மகளிர் தின­மாக கொண்­டாட வேண்­டு­மென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்­வ­தேச மகளிர் ஆண்­டாக உலகம் முழு­வதும் அனு­ச­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.

unwomen-director
1977 ஆம் ஆண்டு  ஐ.நா. பொதுச் சபை­யா­னது மார்ச் 8ஆம் திக­தியை பெண்கள் உரி­மைக்கும் உலக சாமா­தா­னத்­துக்­கு­மான ஐ.நா தின­மாக அனுஷ்­டிக்­கு­மாறு தனது அங்­கத்­துவ நாடு­க­ளுக்கு அழைப்பு விடுத்­தது.  


இவ்­வ­ருட சர்­வ­தேச மகளிர் தினத்­துக்­கான ஐ.நாவின்  தொனிப்­பொருள் மாறு­கின்ற வேலை உலகில் பெண்கள்: 2030 இல் பூமி 5;0:50 என்­ப­தாகும். 


ஐ.நாவின் மகளிர் விவ­கார நிறை­வேற்றுப் பணிப்­பாளர் பூம்ஸீலே லம்போ நூகா இது தொடர்­பாக விடுத்­துள்ள செய்­தியில், உல­கெங்கும் ஆண்கள் மற்றும் சிறு­வர்­க­ளை­விட பெண்­களும் சிறு­மி­களும் அதிக நேரத்தை வீட்­டு­வே­லை­களில் செல­வி­டு­வின்­றனர்.

 

logoஅவர்கள், தமது இளைய சகோ­தர சகோ­த­ரிகள், குடும்­பத்தின் வய­தான அங்­கத்­த­வர்­களை பரா­ம­ரிப்­ப­துடன் நோய்க்கு ஆளா­ன­வர்­களை கையாள்­கின்­றனர்., வீட்டை நிர்­வ­கிக்­கின்­றனர்.

 

பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் இந்த சமத்­து­வ­மற்ற வேலைப் பிரி­வா­னது, பெண்கள் மற்றும் சிறு­மி­களின் கல்வி, ஊதி­யத்­து­ட­னான வேலை, விளை­யாட்டு மற்றும் சிவில் மற்றும் சமூக தலை­மைத்­து­வத்­துத்தில் பங்­கேற்­ப­தற்கு இடையூறாக உள்­ளதை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 


2030 ஆம் ஆண்டில் அனைத்து சிறு­மிகள், சிறார்­களும் இல­வ­ச­மாக சமத்­துவ, தர­மான ஆரம்பக் கல்­வியை பூர்த்தி செய்­வதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து சிறுவர் சிறுமியிரும் சமத்துவமான ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலைகளை அடைவதை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான அனைத்து வித பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பனவும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான ஐ.நாவின் நிகழ்ச்சிநிரல்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 137 times, 1 visits today)

Post Author: metro