புறக்­கோட்டை மெயின் வீதியில் பிரா விற்­பனை செய்யும் இளை­ஞரின் அனு­ப­வங்கள்

(சிலாபம் திண்­ண­னூரான்) 

 

“ஊக்­கத்தைக் காட்­டிலும் உதவி புரி­யக்­கூ­டிய உய­ரிய சக்தி உலகில் வேறு எது­வு­மே­யில்லை. ஊக்கம் சும்மா மன­த­ளவில் இருந்து விட்டால் மட்டும் போதாது. அது செய­லாக வெளிப்­பட வேண்டும். அந்தச் செய­லுக்­குத்தான் உழைப்பு” என்று பெயர் என்­கிறார் கொழும்பு 11 மெயின் ஸ்ரீட் (பிர­தான வீதி) நடை­பா­தையில் வியா­பாரம் செய்யும் இளைஞர் ஜி.ராஜ்­குமார்.

DSCF3969

“எனது விடா­மு­யற்­சிதான் எனக்கு இன்­றைக்கு வெற்­றியைக் கொடுத்­தி­ருக்கு. நடை­பா­தையில் வியா­பாரம் செய்­வது என்­பது மிக இல­கு­வான காரியம் அல்ல. கிரீஸ் தட­விய மரத்தை கட்­டிப்­பி­டித்து மல்­லுக்­கட்டி ஏறு­வது போன்­றது.

 

காலையில் வீட்டை விட்டு வீதிக்கு வரு­கை­யி­லேயே எனது மனது பட் பட்­டென அடித்­துக்­கொள்ளும்.. ஏன் தெரி­யுமா? இன்று மெயின் வீதிக்கு போனதும் அதி­கா­ரிகள் நடை­பா­தையில் வியா­பாரம் செய்ய அனு­ம­திப்­பார்­களா? அல்­லது எங்­களை தங்­களின் வார்த்­தை­களால் திட்டித் தீர்த்து விடு­வார்­களா? என்ற மன­ப் பயம் தான் எப்­போதும் என் மனதில் குடி­யி­ருக்கும். இவ்­வா­றான சங்­க­டங்­களை என்னைப் போன்ற நடை­பாதை வியா­பா­ரிகள் அனை­வரும் தினம் தினம் அனு­ப­விக்­கின்­றனர்.

 

இத்­த­கைய சூழ்­நி­லை­யில்தான் நான் பெரும் கஷ்­டத்­துடன் வியா­பாரம் செய்­கிறேன். எனது அப்­பாவும் இதே இடத்தில் வியா­பாரம் செய்தார். அவ­ரிடம் நான் வேலை செய்தேன். அவரின் பின்னர் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இதே இடத்தில் வெ­யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வியா­பாரம் செய்­கிறேன். இது உங்­க­ளுக்கு புது­மை­யான செய்­தி­யாக இருக்கும். என்னைப் போன்ற நடை­பாதை வியா­பா­ரிகள் அனை­வரும் இயற்­கைக்குள் வாழ்ந்து பதப்­பட்டு பக்­கு­வ­மா­கி­விட்டோம்.

 

நான் பெரி­தாகப் படிக்­க­வில்லை. எட்டாம் வகுப்பு வரையே கல்­வி­கற்றேன். எனது வியா­பாரம் விந்­தை­யா­னது. நாக­ரிகப் பெண்கள் முதல் கிரா­மத்து அழ­கிகள் வரையில் சுண்டி இழுக்கும் வியா­பா­ரத்­தைத்தான் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாகச் செய்து வரு­கின்றேன். என்­னிடம் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டுள்ள தைத்த ஆடைகள் அனைத்தும் பெண்­களின் உள்­ளா­டைகள்” என்றார் ராஜ்­குமார்.

 

“நான் உள்­ளா­டை­களை விற்­பனை செய்­தாலும் எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளான பெண்­க­ளிடம் எவ்­வித சேஷ்­டையும் செய்ய மாட்டேன். கேலி பண்­ணு­வது, நையாண்டி வார்த்­தை­களைக் கொட்­டு­வது எல்லாம் எனக்குப் பிடிக்­காது. என்­னிடம் பெண்­களின் உள்­ளா­டை­க­ளான உள்­பா­வாடை, பெனியன், பிர­ஸியர், பேண்டிஸ் உள்­ளிட்ட பல்­வேறு ஆடைகள் உள்­ளன. பிர­ஸியர் (பிரா) வகை­களின் பல ரகங்கள் என்­னிடம் உள்­ளன. இந்­நாட்டில் தயா­ரிக்­கப்­படும் பிர­ஸியர் வகை­க­ளி­லி­ருந்து சீனா, தாய்லாந்து,

 

இந்­தியா ஆகிய நாடு­களின் பிர­ஸியர் வகை­களும் விதம் வித­மாக கொள்முதல் செய்து வைத்­துள்ளேன். பெண்­களின் மார்­ப­கங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் இரு­பத்­தெட்டு அங்­குலம் முதல் நாற்­பத்தி நான்கு அங்­குலம் வரை­யி­லான அளவில் பல்­வேறு ரகங்­களில் பிர­ஸியர் உள்­ளன. அதே­போன்று பேண்­டிஸ்சும் உள்­ளன” என தனது வியா­பாரம் குறித்த தக­வல்­களை ராஜ்­குமார் தெரி­வித்தார்.

DSCF3938

ராஜ்­கு­மாரின் பேச்சு பெரும் சுவை­யாக இருந்­தது எமக்கு. காக்கா தன் அலகில் கொத்தி எடுத்­ததை விழுங்­க­லாமா, கீழே போட­லாமா என யோசிப்­பது போன்று எங்­களை யோசிக்­கவும் வைத்து விட்டார் ராஜ்­குமார். இந்த வியா­பார நட­வ­டிக்­கையில் தான் எதிர்­நோக்கும் சிர­மங்கள் குறித்தும் அவர் கூறினார். “இந்த எனது வியா­பா­ரத்தில் பிர­ஸியர் வியா­பாரம் பெரும் சிக்­க­லா­னது. நவ­நா­க­ரிக இளம் பெண்கள் முதல் உயர்­தர குடும்ப பெண்கள் வரை எனக்கு பெண் வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர்.

 

இவ்­வா­றான எனது வாடிக்­கை­யா­ளர்கள் தான் எனக்கும் என் குடும்­பமும் வாழ தீனி போடு­ப­வர்கள். இவர்­களை எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளாக பெற்றுக் கொள்ள நான் பட்ட கஷ்டம் எனக்­குத்தான் தெரியும். என்­னிடம் ஏ.சி.இல்லை கண்ணைப் பறிக்கும் மின்­வி­ளக்­குகள் இல்லை. மொத்­தத்தில் எனக்கோ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கோ ஆடை­களை வாங்­கு­ப­வர்கள் அமர்­வ­தற்கு கதிரை கூட இல்லை.

 

இவ்­வா­றான இக்­கட்­டான நிலையில் தான் எனது வியா­பா­ரத்தைச் செய்­கின்றேன். வீதியின் ஓரத்தில் நின்று பிர­ஸி­யர்­களை வாங்க விரும்பும் நவ­நா­க­ரிகப் பெண்­களும் சரி சாதா­ரண மற்றும் உயர்­மட்ட பெண்­களும் அவற்றை தாங்கள் அணிந்­தி­ருக்கும் ஆடை­க­ளுக்கு மேலாக உடுத்திப் பார்ப்­பார்கள்.  அப்­போது வீதியில் செல்லும் கில்­லா­டிகள் கூட்­ட­மாகக் கூடி பத்துப் பேருக்கும் மேலாக வேடிக்கை பார்ப்­பார்கள். அப்­போது எனக்கு அடுப்பின் சூடு தாங்­காது பொங்கி வடியும் பசும்­பாலைப் போன்று கோபம் பொத்­துக்­கொண்டு வரும். அவர்­களை நானும் நண்­பர்­களும் இணைந்து திட்டி, துரத்தி விடுவோம். 

DSCF3940
காரணம், எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளான பெண்­க­ளுக்கு எவ்­வித தீங்கும் எனது இடத்தில் வைத்தும் ஏற்­ப­டக்­கூ­டாது. அவர்­களே என்னை வாழ­வைக்­கி­றார்கள். எனது கண்­ணியம் அவர்­களை என்­னிடம் வர­வ­ழைக்­கி­றது. அதை நான் பாது­காத்துக் கொள்ள வேண்டும். 
பெண்­க­ளுக்­கான உள்­ளா­டை­களை ஆண்­களும் எவ்­வித தயக்­கமும் இல்­லாமல் என்­னிடம் வாங்­கு­வார்கள். உயர்­மட்ட அதி­கா­ரி­களும் எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளாக உள்­ளனர். 


வெள்­ளைக்­கார உல்­லாசப் பெண் பய­ணிகள் குறிப்­பாக, பிர­ஸி­யர்­களை தொட்டு பார்த்து ரசிப்­பார்கள். மாலை­தீவுப் பெண்கள் பெரி­ய­ளவில் பிர­ஸி­யர்­களை வாங்­கு­வார்கள்.


சில பெண்கள் மற்றும் யுவ­திகள் பிர­ஸியர், பேண்டிஸ், உள்­பா­வடை போன்ற உடை­களை கொள்­முதல் செய்­கையில் மிகவும் வெட்­கப்­ப­டு­வார்கள். கூச்சப்படுவார்கள், மெல்லிய குரலில் பேசு­வார்கள். அப்­போது நான் மிகவும் கவ­ன­மாக அன்­போடு அவர்­க­ளுடன் உரை­யா­டுவேன். எனது நடை­பாதை வியா­பாரம் வெற்­றி­ந­டை­போட எனது அன்பு வார்த்­தைகள் பல­மாக உள்­ளன. 


இவ்­வா­றான ஆடை­க­ளுக்கும் மேல­தி­க­மாக சிறு குழந்­தை­களின் ஆடை­க­ளையும் விற்­ப­னைக்­காக வைத்­துள்ளேன். எனது வாடிக்­கை­யா­ளர்கள் மீது பெரும் நம்­பிக்கை வைத்­துள்ளேன். எனக்­கென ஒரு வாடிக்­கை­யாளர் கூட்­டத்­தையே சேமித்து வைத்­துள்ளேன். 


தீபா­வளி, பொங்கல், நோன்­புப்பெ­ருநாள், சித்­திரை புது­வ­ருடப் பிறப்பு, நத்தார் பண்­டி­கைக்­காலம் உள்­ளிட்ட பண்­டிகைக் காலங்­களில் வியா­பாரம் சூடு பிடிக்கும். அக்­கா­லத்தில் மேல­தி­க­மாக இரு­வரை விற்­பனைப் பணியில் அமர்த்திக் கொள்வேன் எனக் கூறினார் ராஜ்­குமார். 
“இன்று மழை பெய்­யுமா, பெய்­யாதா என காலை­யி­லேயே வெறித்து வானத்தை அண்­ணாந்து பார்ப்பேன். வானம் வெறித்து மப்பும், மந்­தா­ரத்­துடன் இடி முழக்கம் இடியாய் இடித்தால் எனது அடி வயிற்றில் சொப்பிங் பேக் கசங்கும் சத்தம் கேட்கும். அன்று கடையை வீதியில் விரிக்க இயலாது போய்விடும். 


புறக்கோட்டை மெயின் வீதியில் பொலிஸா ரையோ அல்லது படையினரையோ கூட்டமாகக் கண்டாலும் எனக்குள் பயம் கௌவிக் கொள்ளும். எங்களை நடை பாதையிலிருந்து அகற்றுவதற்காக வந்து விட்டார்களோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். இவ்வாறு தான் நாள் தோறும் பயந்த மனநிலையுடன்  செத்து, செத்து தொழில் செய்கிறேன் என்றார் ராஜ்குமார் நிதானமான குரலில். 
உண்மையிலேயே, இளைஞர் ராஜ்குமாரின் அனுபவம் பலருக்கு பாடப் புத்தகமாக இருக்கும் என எண்ணிக்கொண்டு அவரின் முயற்சியை பாராட்டி, நாம் விடைபெற்றோம் மனநிறைவுடன். 


(படம்: கே.பி.பி. புஷ்பராஜா)
 

(Visited 2,849 times, 1 visits today)

Post Author: metro