நிர்மாணங்களின்போது பாரிய மரங்களை வெட்டத்தேவையில்லை; இடம் மாற்றி நாட்டலாம்

கட்­டட நிர்­மா­ணங்கள், வீதி விஸ்­த­ரிப்பு போன்ற திட்­டங்­க­ளுக்­காக மரங்கள் தறித்து வீழ்த்­தப்­ப­டு­வ­துண்டு. பாரிய மரங்­களும் இவ்­வாறு அழிக்­கப்­பட நேரி­டலாம். ஆனால், இது போன்ற மரங்­கள் வளர்க்கப்­ப­டு­வ­தற்கு பல தசாப்­தங்கள் செல்லும். இப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வு மரங்­களை இடம்­மாற்­று­வ­தாகும்.

Tree1

 

இந்­தி­யாவின் ஹைத­ரபாத் நகரைச் சேர்ந்த ராமச்­சந்­திரா அப்­பாரி இதற்­கா­கவே நிறு­வ­ன­மொன்றை நடத்­து­கிறார்.


கிறீன் மோர்னிங் ஹேர்ட்­டி­கல்சர் சேர்­விசஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இந்­நி­று­வனம் 5,000 இற்கும் அதி­க­மான மரங்­களை இடம் மாற்­றி­யுள்­ளது.


38 வய­தான ராமச்­சந்­திரா அப்­பாரி விவ­சா­யத்­து­றையில் முது­மாணி பட்டம் பெற்­ற­துடன்,  விவ­சாய வர்த்­த­கத்­து­றையில் எம்.பி.ஏ. பட்­டமும் பெற்­றவர்.

 

ஆனால், பல்­க­லைக்­க­ழக கல்­வியின் பின் தனியார் வங்­கி­யொன்றில் அவ­ருக்கு வேலை கிடைத்­தது. 4 வரு­டங்கள் அவர் அந்த நிறு­வ­னத்தில் பணி புரிந்தார். எனினும், 8 வரு­ட­கால விவ­சாய கல்­வியின் பின்னர் வித்­தி­யா­ச­மான ஒரு துறையில் பணி­யாற்­று­வது எனக்கு சரி­யாகப் பட­வில்லை. அதனால் அத்­தொ­ழி­லி­ருந்து நான் வில­கினேன்” என்­கிறார் ராமச்­சந்­திரா அப்­பாரி.

13680672_852883004842034_3002436927335815160_n

 

2009 ஆம் ஆண்டு பய­ண­மொன்­றின்­போது ராம­ச­சந்­திரா அப்­பாரி கண்ட காட்­சியே  மரங்­களை இடம்­மாற்றும் நிறு­வ­னத்தை அவர் ஆரம்­பிப்­ப­தற்கு வழி­வ­குத்­தது.


“ஹைத­ரா­பாத்­தி­லி­ருந்து விஜ­ய­வாடா நகரை நோக்கி செல்­லும்­போது வீதி அக­லப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைக்­காக பெரும் எண்­ணிக்­கை­யான மரங்கள் வெட்­டப்­ப­டு­வதை அவர் அவ­தா­னித்தார். இவ்­வி­டயம் அவரின் மனதை வாட்­டி­யதாம்.


“அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள நண்பர் ஒரு­வ­ருடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது, மரங்­களை இடம்­மாற்றும் திட்டம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் பின்­பற்­றப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்தார்.

 

இது தொடர்­பாக ஏரா­ள­மான கட்­டு­ரை­களை வாசித்த பின்னர் கிறீன் மோர்னிங் ஹேர்ட்­டி­கல்சர் சேர்­விசஸ் பிரைவேட் லிமிடெட் (Green Morning Horticulture Services Private Limited) நிறு­வ­னத்தை நான் ஸ்தாபித்தேன்” என ராமச்­சந்­திரா அப்­பாரி தெரி­வித்­துள்ளார்.

14520476_885753581554976_2316034486866005064_n
“எனினும், எமது உள்ளூர் நிலை­மை­க­ளுக்கேற்ப சில மாற்­றங்­களை நாம் பின்­பற்ற வேண்­டி­யி­ருந்­தது. சில கட்­டுப்­பா­டு­களை நாம் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. இங்கு மண் மிக இறுக்­க­மா­னது.

 

வெளி­நா­டு­களில் பயன்­ப­டுத்தும் சில இயந்­தி­ரங்­களை இங்கு  சில பகு­தி­களில் பயன்­ப­டுத்த முடி­யாது. அத்­துடன், மின்­சார வயர்கள் எங்­கா­வது தொங்­கு­கி­றதா என்­ப­தையும் பார்க்க வேண்­டி­யி­ருந்­தது” எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

13775575_852883014842033_6679661349030798857_n


இடம் மாற்றும் முறை

“மரங்­களை இடம்­மாற்­று­வது மிகக் கடி­ன­மான வேலை.  இடம்­மாற்­று­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­படும் மரத்தின் பல கிளைகள், இலைகள் அகற்­றப்­பட்டு அதன் எடை குறைக்­கப்­படும்.


பின்னர், மரத்தின் அடிப்­ப­கு­தியில் வேர்­களைச் சுற்றி குழி­யொன்று தோண்­டப்­படும். வேர்­க­ளுக்கு இர­சா­யன மருந்­துகள் விசி­றப்­படும்.


பின்னர் சாக்­குகள் மூலம் வேர் பகுதி ஒரு பந்­து­போன்று சுற்­றப்­படும். பின்னர்  கிரேன்கள் மூலம் மர­மா­னது வாக­னத்தில் ஏற்­றப்­பட்டு, மரம் நடப்­பட வேண்­டிய இடத்­துக்கு கொண்டு செல்­லப்­படும்.

Untitled-3

அங்கு தோண்­டப்­பட்ட குழியில் மரம் நாட்­டப்­பட்ட பின் இர­சா­ய­னங்கள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்­கப்­படும்” என ராமச்­சந்­திரா அப்­பாரி விளக்­கு­கிறார்.


முடிந்­த­வரை ஒரு மரம் ஏற்­கெ­னவே உள்ள இடத்­துக்கு அரு­கி­லேயே அதை மீள நடு­வ­தற்கு நாம் முயற்­சிப்போம். எனவும் அவர் கூறு­கிறார்.


மரங்­களை இடம்­மாற்­று­வது முற்­றிலும் புதிய திட்­ட­மல்ல எனவும் சுமார் கிறிஸ்­து­வுக்­குமுன் 2000 ஆம்  ஆண்­ட­ள­வி­லேயே எகிப்தில் மரங்­களை இடம்­மாற்றும் திட்டம் இருந்ததை தான் அறிந்­து­கொண்­ட­தா­கவும் மக்கள் மரங்­களை வேர்கள் சகிதம் கொண்­டு­செல்­வதை சித்­தி­ரிக்கும் புரா­தன ஓவி­யங்கள் உள்­ள­தா­கவும் ராமச்­சந்­திரா அப்­பாரி தெரி­வித்­துள்ளார்.


ஹைத­ர­பாத்தில் மாத்­தி­ர­மல்­லாமல் டில்லி, குஜராத் உட்­பட இந்­தி­யாவின் பல்­வேறு நக­ரங்­களில் எமது நிறு­வனம் மரங்­களை இடம் மாற்­றி­யுள்­ளது. அர­சாங்க மற்றும் தனி­யா­ருக்­காக நாம் மரங்­களை இடம்­மாற்றிக் கொடுக்­கிறோம். 90 வகை­யான இனங்­களைச் சேர்ந்த சுமார் 5,000 மரங்களை இவ் ­வாறு இடம் மாற்­றி­யுள்ளோம்” என்­கிறார் ராமச்ச்­சந்திரா அப்­பாரி.

tree-3
செலவு
மரங்­களை இடம்­மாற்­று­வ­தற்­கான செல­வா­னது  3 விட­யங்­களில் தங்­கி­யுள்­ளது. மரங்­களின் பருமன், மரங்­களின் எண்­ணிக்கை மற்றும் அது இடம் மாற்­றப்­படும் தூரம் ஆகி­ய­ன­வாகும். பொது­வாக, 15 வய­தான ஒரு மரத்தை இடம்­மாற்­று­வ­தற்கு நாம்  6,000 இந்­திய ரூபாவை (சுமார் 13,613 இலங்கை ரூபா) நாம் அற­வி­டு­கிறேம். 100 வய­தான மரத்தை இடம் மாற்றுவதற்கு 1.5 இலட்சம் இந்திய ரூபாவையும் (சுமார் 3.4 இலட்சம் இலங்கை ரூபா) அறவிடுவதுண்டு.


இதேவேளை, இடம்மாற்றப்படும் மரங்கள் தப்பிப்பிழைப்பது மரங்களின் இனத்துக்கேற்ப மாறுபடும் எனவும் ராமச்சந்திரா அப்பாரி தெரிவித்துள்ளார்.


அரச மரம், ஆலமரம் போன்றவற்றின் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 90 சதவீதமாகும். ஆனால், கடினமான தன்மையான மரங்கள் அதாவது வேம்பு, புளியமரம், தேக்கு போன்றவற்றின்  உயிர்பிழைக்கும் வாய்ப்பு 60 – 70 சதவீதம் என்கிறார் ராமச்சந்திரா அப்பாரி.

நரேன்

(Visited 291 times, 1 visits today)

Post Author: metro