இன்னும் பலரை இலட்சாதிபதிகள், கோடீஸ்வரராக்குவேன் – சுவீப் டிக்கெட் விற்பனையாளர் சரவணமூர்த்தி

(சிலாபம் திண்­ண­னூரான்)


‘அதிர்ஷ்டம் என்­பது ஒரு­வனை ஆண்­டியாய் ஆக்­கியும் அழகு பார்க்கும் அர­சனாய் ஆக்­கியும் அலங்­காரம் செய்யும். நான் பலரை இலட்­சா­தி­ப­தி­யா­கவும் ஒரு­வரை கோடீஸ்­வ­ர­ரா­க வும் மாற்றம் பெற­வைத்­துள்ளேன். ஆனால் நானோ இன்னும் இலட்­சத்தை என் விரல்­களால் எண்ணிப் பார்க்­க­வும் ­இல்லை. எண்ணிப் பார்க்க ஆசை  கொள்­ளவும் இல்லை” என்­கிறார் சத்­தி­ய­மூர்த்தி சர­வ­ண­மூர்த்தி.

இவர், சுவீப் டிக்­கெட்­டுகள் எனும் அதிர்ஷ்­ட­லாபச் சீட்­டு­களை விற்­பனை செய்­கிறார். நான் எனது 12 வயதில் சுய­மாகத் தொழில் செய்ய இறங்­கி­யவன். நெற்­றியில் துளிர்­விட்டுப் பரவும் வியர்­வையை இடது கையால் துடைத்து நிலத்தில் சிந்­து­கையில் கிடைக்கும் சந்­தோஷம் எத்­தனை கோடி கிடைத்­தாலும் கிடைக்­காது என்­கிறார்.

DSC08194

“ஆணுக்கு அழகு உழைத்து சாப்­பி­டு­வது தான். அடுத்­தவன் உழைப்பில் வாழ்­பவன் சோம்­பேறி. இவ்­வா­றான சோம்­பே­றி­க­ளுக்கு ஏற்­படும் துன்­பங்­க­ளுக்­கெல்லாம் மூல­கா­ரணம் அவர்­களின் சோம்­பேறித் தனமும் சுய­நல உணர்ச்­சி­யுமேயாகும். சோம்­பல்தான் முட்­டாள்­க­ளுக்கு வழங்கும் விடு­மு­றை­யாகும். கண்கள் சிலிர்க்க பேசு­கிறார்” சர­வணன்.

“என் வாழ்க்­கையில் நான் சோர்­வுற்­ற­தில்லை. எனது 12 வயதில் தம்­புள்­ளையில் ஒரு மரக்­கறி சந்தை கடையில் வேலைக்கு சேர்ந்தேன். என்­னோடு பிறந்­த­வர்கள் ஆறு பேர். எல்­லோரும் ஆண்­க­ளாவர். வறுமை வாட்­டி­யது. வறுமை என்­பது துன்­பத்தின் நிழல் மட்­டு­மல்ல.

ஆசையை தூண்­டி­விடும் தூண்­டுகோல். காச நோயின் அறி­குறி இருமல். நாசத்தின் அறி­கு­றிதான் ஆசை. அதை அடை­யாளம் கண்டு கொண்டால் நிம்­ம­தி­யாக வாழலாம் தானே?” சிரிப்பும் சிலிர்ப்­பு­மாக கேட்­கிறார். சர­வணன்.

தம்­புள்ளை மரக்­கறிக் கடையில் எனது பன்னி­ரெண்டு வயதில் அன்று ஒரு நாளுக்கு நான் பெற்ற சம்­பளம் வெறும் ஐம்­பது ரூபா. அந்த ஐம்­பது ரூபா­வில்தான் எனது மூன்று வேளை பசி­யையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். எனது வயதில் வாழ்­ப­வர்­க­ளுக்கு ஏற்­படும் ஆசைதான் அன்று எனது மன­திலும் ஏற்­படும். 

அவ்­வ­ளவு ஆசையும் தம்­புள்ள மரக்­கறி கடையில் மரக்­க­றி­யோடு காலை முதல் இர­வு­வரை மல்லுக் கட்­டு­வதால் அந்­த ஆ­சை­களும் மரக்­க­றி­யோடு சென்­று­விடும் என்றார் ஆதங்­கத்­துடன்.

DSC08192

பாட­சாலை சென்று கல்வி கற்கும் வயது. எனது வயதை எனது முகமும் பேச்சின் குரலும் அடை­யா­ளப்­ப­டுத்­தி­விடும். கடைக்கு வருகைத் தரும் வாடிக்­கை­யா­ளர்­களில் நல்ல மனதை கொண்ட சிலர் என்னைப் பார்த்து பெரும் கவ­லைப்­ப­டு­வார்கள்.

தன்னைப் பற்றி கவ­லைப்­ப­டாமல் என்னைப் பார்த்து துன்­பப்­ப­டு­ப­வர்­களை பார்த்து எனது உடலில் வலி எடுக்கும். என் மீதும் துன்­பப்­படும் மனி­தர்­களும் எம்­மோ­டு­தானே வாழ்­கி­றார்கள் என சில நேரங்­களில் நான் எனக்குள் பெரு­மைப்­ப­டு­வதும் உண்டு.

அப்­போது இவ்­வா­றான நல்ல மனி­தர்கள் "நோயற்ற வாழ்வும் குறை­வற்ற செல்­வமும்" பெற்­று­வாழ வேண்­டு­மென இறை­வ­னிடம் பிரார்த்­தனை செய்துக் கொள்வேன்.  சில இளம் பெண்­களும் வய­தான அம்­மா­மார்­களும் நான் எனது வயது, கல்­வியைத் தொலைத்து மரக்­கறி மூடை­க­ளுடன் சமர் செய்­வதை கொண்டு என் மீது பரி­தாபம் கொண்டு பணம் தரு­வார்கள். அப்­போது நான் பணம் பெற மறுத்­து­வி­டுவேன்.

அதற்குக் காரணம் அக்­ கடை முத­லாளி நான் வாடிக்­கை­யா­ள­ரிடம் பணம் பெறு­வதைக் கண்டால், என் மீது சந்­தே­கத்தை வளர்த்து கொள்வார். பின்னர் என் தொழி­லுக்கும் சங்கு ஊதப்­பட்டு விடும். இதி­லி­ருந்து சிலர் பணம் பெற மறுப்­பதால் சிற்­றுண்டி வகை­களை கடை­களில் வாங்கி வந்து தரு­வார்கள்.

அவை­களை அன்­போடு பெற்று ஏனைய எனது நண்­பர்­க­ளோடு இணைந்து பகிர்ந்து சாப்­பி­டுவேன். அப்­போது கிடைக்கும் சந்­தோ­ஷத்­திற்கு எல்­லையே இல்லை. இவ்­வாறு தம்­புள்ளை சந்­தையில் 12 வரு­டங்­களை தொலைத்தேன். ஒரு நாள் சந்­தையில் மழை நேரத்தில் வழுக்கி இலை­ கோவா மூட்­டை­யோடு சரிந்து விழுந்தேன்.

அப்­போது சக­தியில் நான் குப்­புற விழுந்­து­கி­டக்க என் மீது கோவா மூடை மல்­லாந்து படுத்துக் கிடந்­தது. கஷ்­டப்­பட்டு கோவா மூடையை சக­தியில் தள்­ளி­விட்டு எழும்­பு­வ­தற்கு முயன்றேன். என்னால் எழ முடி­ய­வில்லை. உடல் முழு­வதும் சேற்று நீரில் கசங்கி இருந்த நேரம் அது.

என்னைச் சுற்றி கூட்­டமாய் கூடி­விட்­டனர். எனது நண்­பர்கள் என்னைத் தூக்கி நிறுத்தினர். என்னால் நிற்க இய­ல­வில்லை. அப்­போது எனது உடலின் பின்­ப­கு­தியில் முள்­ளந்­தண்டு முறிந்து நரக வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யது. எத்­த­னையோ வலி­களை என் வாழ்க்­கையில் ஏற்றுக்கொண்ட என் உடல் இவ்­ வ­லியை ஏற்க மறுத்­தது” என்றபோது அவரின் முகத்தில் சோகம் அப்பிக் கொண்­டது.

பழைய சோகத்­தி­லி­ருந்து மீண்ட சர­வ­ண­மூர்த்தி மீளவும் தொடர்ந்தார். “ஒரு­வாறு முள்­ளந்­தண்டு முறி­வுக்கு வைத்­தியம் செய்து சுகம் பெற்றேன். முள்­ளந்­தண்டு முறிந்­ததால் முன்­னரைப் போன்று மரக்­கறி சுமை­களை என்னால் சுமக்க முடி­ய­வில்லை. அதன்பின்னர் இயல்பு நிலைக்குள் என்னால் திரும்ப முடி­ய­வில்லை.

பின்னர் எனது நண்பர் மூல­மாக கொழும்பு வந்­த­டைந்தேன். இங்கு சுவீப் டிக்கெட் விற்­பனை முக­வ­ரிடம் தொழி­லுக்குச் சேர்ந்தேன். கட ந்த ஐந்­தரை வரு­டங்­க­ளாக அதிர்ஷ்­ட­லாபச் சீட்டு விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்ளேன்” என்­றவர் எங்­களைப் பார்த்துச் சிரித்தார்.

ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ­மீற்றர் வரை சைக்­கிளில் சுவீப் தட்டைப் பொருத்தி, சைக்­கிளை உருட்டிக் கொண்டே நடைப் பய­ணத்தில் விற்­ப­னையில் ஈடு­ப­டுவேன். முள்­ளந்­தண்டு உடைந்­த­மையால் பல கிலோ­மீற்றர் தூரத்­துக்கு சைக்­கிளை மிதிக்க இய­லாது. வெயி­லிலும் மழை­யிலும் காய்ந்தும் நனைந்தும் எனது நடை பயணம் ஐந்­தரை வரு­டங்­க­ளாக தொடர்­கி­றது.

சுவீப் டிக்கெட் விற்­பனை மூல­மாக பலரின் வாழ்க்கையை பிரகாசிக்க செய்துள்ளேன். ஒரு இலட்சம், 10 இலட்சம், 20 இலட்சம் என எனது சுவீப் டிக்கெட் விற்பனை மூலமாக பலரை அதிர்ஷ்டசாலிகளாக பரிமாணம் பெற வைத்துள்ளேன்.

3 கோடியே 84 இலட்சம் ரூபா வென்ற ஒரு அதிர்ஷ்டசாலியையும் உருவாக்கியுள்ளேன். இது எனது சுய தொழில். இத் தொழில் மூலமாக இன்னும் பலரை கோடீஸ்வரராக, இலட்சாதிபதிகளாக மாற்றம் பெற வைப்பேன். இதுவே எனது கனவாகும் என்கிறார்  சத்தியமூர்த்தி சரவணமூர்த்தி
 
(படம்: கே.பி.பி.புஷ்பராஜா)   

 

(Visited 359 times, 1 visits today)

Post Author: metro