‘புற்­றுநோய்க் கலங்­களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு உண்டு’ – கண்டி வைத்­தியசாலையில் சிகிச்சை அறிமுகம்

(வத்­து­காமம் நிருபர்)

vlcsnap-2017-03-15-14h31m01s801 புற்­றுநோய்க் கலங்­களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு உண்­டென பேரா­தனை பல்லைக் கழ­கத்தில் மேற்­கொண்ட ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ள­தாக பேரா­சி­ரியர் ஜயந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

புற்றுநோய்க்­க­லங்ளை முற்­றா­க­ச் செயல் இழக்­கச் ­செய்யும் ரசா­யன இயல்பு பாகற்காய் வித்­துக்­க­ளுக்கு இருப்­ப­தாக ஆய்­வுகள் மூலம் அறிந்து கொண்­ட­தாகவும் பேரா­தனைப் பல்­லைக்­க­ழக மிரு­க­வைத்­திய பிரிவு பேரா­சி­ரியர் ஜயந்த ராஜ­பக் ஷ மேலும் தெரி­வித்துள்ளார்.

அவர் இது தொடர்­பாக மேலும் கூறு­கையில், ஒரு வருட கால­மாக பாகற்காய் வித்­துக்­களை வைத்து தான் மேற்­கொண்ட ஆய்­வு­களின் படி பாகற்காய் வித்­தி­லுள்ள அல்பா ஸ்டிய­ரிக்­பெடி அமிலம் (Steric fatty acid) என்ற ரசா­யனம் மூலம் புற்று நோயைக் குணப்­ப­டுத்­தலாம்.

கிரு­மி­ நாசினி பயன்படுத்தப்­ப­டாத சுத்­த­மான பாகற்காய் வித்­துக்­களை பயன்படுத்தி மேற்­படி ஆய்­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பல்­வேறு விலங்­கி­னங்ளைப் பயன்படுத்தி இந்த பரிசோதனையை மேற்­கொள்ளப்பட்டது.

இதன்மூலம் அல்பா இஸ்­ட­ய­ரிக்­பெடி அமி­லத்­தினால் புற்­று­நோயைக் குணப்பபடுத்­த­லாம் என்­பது உறு­தி­யா­னது. பொதுமக்கள் மத்­தி யில் பாகற்காய் நீரி­ழிவு நோய்க்கு சிறந்த ஒரு நிவா­ர­ணி­யாகப் பெயர் பெற்­றி­ருந்தபோதும், ­பொ­து­வாக இது­வரை பாகற்காய் வித்­துக் களை உண­வாகக் கொண்­ட­தில்லை.

ஆனால், பாகற்காய் முழு­மை­யான மருத்­துவக் குணம் கொண்­டதும் குரு­தி­யி­லுள்ள சீனி மட்­டத்தை முற்­றாகக் கட்­டுப்­ப­டுத்­தக் கூ­டி­ய­துமாகும்.

vlcsnap-2017-03-16-07h46m37s431

மிகவும் தூய பாகற்காய் வித்­துக்களை இந்த ஆய்­வுக்காக எடுத்­துக்­கொண்டோம். அப்­ப­டி­யான வித்­துக்கள் ஒரு கிலோ 6,000 ரூபா முதல் 8,000 ரூபா வரை காணப்­பட்­டது.

vlcsnap-2017-03-16-07h49m54s956

ஒரு பாகற்காய் கப்­சூ­லுக்கு 8 வித்­துக்கள் வரை தேவைப்­ப­டு­கி­ன்றன. கண்டி வைத்­தியசாலை­யி­லுள்ள நோயா­ளர்­க­ளுக்கு இந்த வைத்­திய முறையை அறி­முகம் செய்­துள்ளோம்.

vlcsnap-2017-03-15-14h31m22s903

இது வெற்­றி­க­ர­மாக முன்னெடுக்­கப்­பட்டு வருகிறது.­ விரைவில் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக வைத்­திய பீடத்­துக்கு இதனை ஒப்­ப­டைக்க உள்ளோம்.

vlcsnap-2017-03-16-07h49m24s232

கண்டி வைத்­தி­ய­சா­லையின் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மொகமட் ஹில்மியின் விசேட கண்காணிப்பில் கண்டி வைத்தியசாலை நோயாளர்களுக்கு வாரத்துக்கு இருமுறை பாகற்காய் வித்திலான மருந்து வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

vlcsnap-2017-03-16-07h47m41s871

vlcsnap-2017-03-16-07h47m25s263

(Visited 336 times, 1 visits today)

Post Author: metro