‘சிறுசுகளின் கைகளில் எனது மெஜிக் பலூன்கள் தவழ்கையில் சந்தோஷத்தில் மிதப்பார்கள்’

(சிலாபம் திண்­ண­னூரான்)

IMG_20170325_165933“இன்பம், துன்பம் ஆகிய இரண்­டையும் பொருட்­ப­டுத்­தாமல் ஊக்கம் தள­ராமல் உழைப்­பி­லேயே எப்­போதும் கண்ணும் கருத்­துமாய் இருப்­போ­மானால் விதியால் நம்மை எது­வுமே செய்ய முடி­யாது. அந்த விதியை நம்மால் வெல்ல முடியும்.

மாலை மூன்று மணி முதல் இரவு பத்து மணி­வரை பிறந்த நாள் விழாக்­களில் மெஜிக் பலூன் மூல­மாக பல்­வேறு மாயா­ஜால உரு­வங்­களை நிர்­மா­ணித்து சின்னஞ் சிறு­சு­களின் மனதை மகிழ்ச்சி சமுத்­தி­ரத்­திற்குள் மூழ்க வைப்பேன்.

அப் பிஞ்­சு­களின் கரங்­க­ளிலும் கன்­னங்­க­ளிலும் வண்ண வண்ண ஓவி­யங்­களை பெயின்ட் மூல­மாக தூரி­கையால் வரைவேன். கள்ளம் கப­ட­மற்­ற­வர்­க­ளுடன் செயற்­ப­டு­வதால் எனக்கு சளிப்பு தட்­டாது.

சின்னஞ் சிறு­சு­களின் பிறந்த நாள் விழா கம்­பீ­ர­மாக ஜொலி, ஜொலிக்க நானும் எனது குழுவினரும் விருந்­தி­னர்­களின் வார்த்­தை­க­ளுக்கு கட்­டுப்­பட்டே செயல்­ப­டுவோம்.

அவர்கள் முகம் சுளிக்­காது கோபம் கொள்­ளாத வகை­களில் பல்­வேறு மெஜிக் வித்­தை­களை நடத்தி அனை­வ­ரையும் சொர்க்­கத்­துக்கே கொண்டு போய் விடுவோம்.

எங்­களின் குழுவில் பல்­வேறு விநோ­தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் கலை­ஞர்கள் உள்­ளனர். ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு துறை­களில் தங்­களின் திற­மை­களை வெளிப்­ப­டுத்­துவர்.

சிறு­சு­களின் கைகளில் எனது மெஜிக் பலூன்கள் தவழ்­கை யில் அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டு நீர்ப் பற­வை­களை போன்று சந்­தோ­சத்தில் மிதப்­பார்கள். அப்­போது என் கவ­லை கள் எல்லாம் என்னை விட்டு தொலைந்து விடும்.

அந் நேரத்தில் எனக்குள் எழும்பும் சந்­தோ­­ஷத்தை எத்­தனைக் கோடியை கொட்­டி­னாலும் மீளவும் பெற முடி­யாது. இதனால் தான் கவிஞர் கண்­ண­தாசன் ஐயா “குழந்­தையும் தெய்­வமும் குணத்தால் ஒன்று, குற்­றங்­களை மறந்­து­விடும் மனத்தால் ஒன்று” என குழந்­தை யும் தெய்­வமும் படத்தில் பாடலை எழு­தி­னாரோ” என்­கிறார் வத்­த­ளையைச் சேர்ந்த பீ. கோபிசன்.

இவர் க.பொ.த. சாதாரண­தர, உயர்­தரம் வகை கல்வி பெற்­றவர். இளை­ஞ­ரான இவர் பிர­பல குளிர்­பான நிறு­வ­ன­மொன்றில் விற்­பனை பிரிவில் கட­மை­யாற்­று­கின்றார். 

தனது மைத்­துனர் வாயி­லாக மெஜிக் பலூன் வித்­தை­களை கற்றுக் கொண்­டுள்ளார். பின்னர் இளம் குழந்­தை­களில் கன்­னங்கள் கை களில் வர்ணம் (Paint) மூல­மாக சித்­திரம் தீட்டும் கலையை சுய­மாக பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டார் என்­கிறார் கோபி.


20170312_125848பிறந்த நாள் வைப­வங்கள், களி­யாட்ட நிகழ்ச்­சிகள் என பல­த­ரப்­பட்ட இவ்­வா­றான சிறப்பு நிகழ்­வுகள் கப்­பல்கள், ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்கள், தூத­ர­கங்கள் சுற்­றுலாப் பய­ணி­களின் வைப­வங்கள், தனியார் இல்­லங்­க­ளில் இடம்­பெறும் விழாக்கள் உள்­ளிட்ட பல இடங்­களில் இடம்­பெறும் நிகழ்­வு­களில் இணைந்து எமது வேடிக்கை விளை­யாட்­டுக்­களை அடை­யா­ளப்­ப­டுத்­துவோம்” என்­கிறார் கோபி. இவரின் வயது வெறும் 21 தான்.

மீண்டும் கோபி தனது வெடிச் சிரிப்­புடன் தொடர்­கிறார் மெல்­லிய குரலில்.“விழாக்­களில் சின்­னஞ்­சி­று­சுகள் எம்­மோடு அந்­நி­யோன்­ய­மாக பழ­கு­வார்கள்.

குழந்­தைகள் கேட்கும் டிசைன்­களில் கலை அம்சம் பிச­காது மெஜிக் பலூ­னுக்குள் காற்று ஏற்றி உரு­வங்­களை நிர்­மா­ணித்து தருவேன். குறிப்­பாக மிரு­கங்­களின் உரு­வங்கள், வாள், கத்தி, இதயம், ஸ்பைடர் மேன், சுப்பர் ஹீரோக்கள், பூ வகைகள் என பல உரு­வங்­களை நிர்­மா­ணித்து குழந்­தை­களின் மனதை குளிர வைப்பேன்.

இரண்டு வய­துக்கும் மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு அவர்கள் விரும்பும் டிசைன்­களை கைகளில் கன்­னங்­களில் பெயின்ட் மூல­மாக வண்ண வண்ண கலர்­களில் வரைவேன். தோல்­களில் சித்­திரம் வரை­வ­தற்­கான பெயின்ட் வகைகள் உள்­ளன.

இவ்­வா­றான பெயின்ட் வகை­களில் கீறப்­படும் ஓவி­யங்கள் உடலில் இருந்து வெளி­வரும் வியர்­வையில் அழிந்­து­விடக் கூடி­யது. சுமார் இரண்டு அல்­லது மூன்று மணித்­தி­யால இடை­வெ­ளியில் தானா­கவே இச்­ சித்­தி­ரங்கள் மறைந்­து­விடும் தன்­மையை இப் பெயின்ட் இனம் வழங்­கு­கி­றது.

அறு­பத்­தைந்து வயதை கடந்த பெண்­களும் விழாக்­களில் என்­னிடம் கன்­னத்தில் கைகளில் நெற்­றியில் பல்­வேறு டிசைன்­களை கொண்ட அலங்­கா­ரங்­களை வரையச் சொல்­வார்கள். அதில் அவர்­க­ளுக்குள் ஒரு ஆனந்தம் கொப்­ப­ளிக்கும்.

இவ்­வா­றான நிலையில் சித்­தி­ரங்­களை கைகள், கன்­னங்­களில் தீட்­டு­கையில் பலர், கருத்­துக்கள், கேள்­விகள், சந்­தே­கங்­க­ளுக்கு பதில் சொல்ல வைத்தே எம்மை சாக­டித்து வி டுவார்கள்.

பல வேலை­களில் நாம் மிகவும் நுட்­ப­மாக பொறு­மையை கடைப்­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது. இங்­குதான் எம் பொறுமை வலிமை பெற்று வளர்ச்சி பெறு­கி­றது.

நையாண்டித் தன­மா­கவும் பலர் கேள்­வியை எழுப்­புவர். கார்­ணிவேல் போன்ற நிகழ்­வு­க­ளுக்கு எம்மை அமைப்­பா­ளர்கள் அழைத்துச் சென்றால் அது பெரும் துன்பக் கதை தான். ரசி­கர்கள் நக்கல், நையாண்டி, குத்தல் வார்த்­தை­களை எம்­மீது அம்­பாக ஏவி விடு­வார்கள். இதற்கும் மேலாக குடி­கா­ரர்­களை சமா­ளிப்­பதே பெரும் கஷ்­ட­மாகும். என்றார் கோபி. 

மீண்டும் ஒரு சின்னச் சிரிப்­புடன் தொடர்ந்தார் கோபி. “நாம் பலரை விழாக்­களில் எமது திற­மையின் ஊடாக சந்­தோஷ உல­கத்­துக்கு அழைத்துச் செல்­கிறோம்.

அவர்­களின் கொண்­டாட்­டத்­தின்­பேது நாமே ஹீரோக்­க­ளாக இருப்போம். எம்மைச் சுற்றி பலரும் கண் சிமிட்டி பெரு­மை­யுடன் ஆச்­ச­ரி­ய­மாக எம்மை சுற்றி பார்­வை­யி­டு­வார்கள். பலர் சில விழாக்­களில் குடித்து கும்­மாளம் போடு­வார்கள்.

20170312_130210 ஆனால் எம்மை எவ­ருமே கண்டு கொள்­வ­தில்லை. ஓரங்­கட்டி விடு­வார்கள். சில விழாக்­களில் எமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட கிடைக்­காது. 

தண்ணீர்த் தாகம் எம்மை மிரட்டும். பணத்­திற்­காக எமது தாகத்­தையும் முடக்கிக் கொள்வோம். இத­னால்தான் பணம் பத்தும் செய்யும் என்­கி­றார்­களோ தெரி­ய­வில்லை.

சில வைப­வங்­களில் சாப்­பாடும் கிடைக்­காது. பசி­யுடன் செயற்­ப­டுவோம். இங்­குதான் நாங்கள் மனிதப் பிறப்­பி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறோம். இது நாக­ரீ­கத்தின்  தாக்­க­மாகும்.

பல நாட்கள் நாம் விடிய மூன்று மணி­வரை கடமை புரிவோம். தண்­ணீரும் கிடைக்­காது சாப்­பாடும் கிடைக்­காது. இங்கு நாம் மனி­தர்கள் மத்­தியில் தாம் பிரிக்­கப்­ப­டு­கிறோம் என்­பதே உண்­மை­யாகும். எமது உழைப்பை பெறு­ப­வர்கள் எமது தாகம், பசியைப் பற்றி கவலை கொள்­வ­தில்லை.

பெரும் வசதி படைத்­த­வர்­களின் மாட மாளி­கை­களில் இடம்­பெறும் நிகழ்­வு க்கு எம்மை அழைப்­பார்கள். எல்லா கூத்தும் இணைந்து வர­வேற்­ப­றையில் ஆடல் பாடல் என கொண்­டாட்டம் இடம்­பெறும்.

எம்மை உள்ளே நுழைய விட­மாட்­டார்கள். நாம் தரா­தரம் குறைந்­த­வர்­க­ளாக அவ்­வி­டத்தில் மாறு­கிறோம்.

மாளி­கையின் முற்­றத்து பூங்­காவின் எமது மெஜிக் விளை­யாட்டை காட்­சிப்­ப­டுத்த கட்­ட­ளை­யி­டு­வார்கள். நிகழ்வு நிறை­வ­டைந்­ததும் எமது கொடுப்­ப­னவை கொடுத்து முற்­றத்­தோடு “பை” சொல்லி அனுப்பி விடு­வார்கள்.

இவ்­வாறே கலை­ஞர்­க­ளான எமக்கு கிடைக்கும் மரி­யாதை இதை யாரிடம் சொல்லி அழு­வது” என்­கிறார் கோபி வருத்­தத்­துடன். வைப வம் நிறை­வ­டைந்து வீடு திரும்ப வீதியில் நடந்து செல்­கையில் எனது மனது துள்ளும். கவ­லையில் மனம் துண்டு துண்டாய் உடைந்து சிதறும். வீட்டில் போய் கட்­டிலில் சாய்ந்­ததும் துன்­பத்தின் இன்­னல்கள் ஒன்­றோடு ஒன்று முட்டி முட்டி மோதிக் கொள்ளும்.

ஆனால் ஒன்றை உறு­தி­யாக மனம் திறந்து சொல்வேன். பெரி­ய­வர்கள் மனதில் பேதம் இருக்­கின்­றது. பிஞ்சு உள்­ளங்­களில் அப்­போதும் இல்லை. இந்த பிஞ்சு குழந்­தைகள் கையில் மெஜிக் பலூன்­களை நான் வழங்­கி­யதும் அப் பிஞ்­சுகள் எமக்கு சிற்­றுண்டி வகை­களை தன் பிஞ்சு விரல்­களில் தரு­கையில் அவர்­களின் அன்பும் பாசமும் வெளிச்சம் போட்டு காட்டும் அந் நேரத்தில் பெரி­யர்­களின் பேத உணர்வின் வலிமை எம்மை விட்டு மறைந்து விடு­கின்­றது.

அவர்­களின் மனதில் உலகம் தெரியும். அப்­போது அவர்கள் அவ்­வி­ழாவில் எமக்கு உயர்ந்­த­வர்­க­ளாக தெரி­வார்கள் எனச் சொல்­கிறார் கோபி மன இறுக்­கத்­தோடு.

“எந்த ஒரு வெற்­றிக்கும் பின்னால் வேத­னைகள் தான் வேர் வைக்கும். அப்­ப­டி­யான வர­லா­றுதான் எமது தொழி­லுக்குள் முடங்கி உள்­ளது. கடந்த ஐந்து வரு­டங்­களில் 400 க்கும் மேற்­பட்ட விழாக்­களில் எனது வித்­தையை காட்டி பலரை பர­வ­சப்­ப­டுத்­தி­யுள்ளேன். தன்­னம்­பிக்­கையே எனது விதை­யாகும்.

மதிப்பு என்­பது நாம் மற்­ற­வர்­க­ளுக்கு அளிப்­பது. நம்மை மற்­ற­வர்கள் மதிக்­கி­றார்­களா? மிதிக்­கி­றார்­களா? என்­பதை ஆராய்ந்துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டாது. அதை பொருட்­ப­டுத்­தாது நாம் அவர்­க­ளுக்கு மதிப்பைத் தர வேண்டும். இதுதான் உண்­மை­யான மனிதத் தன்மை” என மனம் விட்டு தெரிவித்தார் கோபி.

(படங்கள்: கே.பி.பி. புஷ்பராஜா)

(Visited 299 times, 1 visits today)

Post Author: metro