பற்­களை பரா­ம­ரிப்­ப­தற்­கான சில வைத்­தி­ய ஆலோ­ச­னை­கள் – பல் வைத்­திய நிபுணர் சுரேஷ் சண்­மு­க­நாதன்

ஒரு நாளைக்கு இரு தட­வைகள் பற்­களை நன்றாக துலக்­க­ வேண்டும். ஆறு­ மாதங்களுக்கு ஒரு முறை பல் ­வைத்­தி­யரை நாடி பரி­சோ­தித்­துக் ­கொள்­ள­வேண்டும் என்கிறார் பல் வைத்­திய நிபுணர் சுரேஷ் சண்­மு­க­நாதன்.  இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­த­வை: 

பற்­களை எவ்­வாறு துலக்­க­ வேண்டும்? என்பது குறித்து விளக்கம் தாருங்­கள்

ஒரு நாளைக்கு இரு தட­வைகள், அதா­வது காலை­யிலும் இரவிலும் பற்­களை நன்­றாக துலக்க­ வேண்டும். உணவு உட்­கொண்­டதும் முர­சு­களில் உணவு படி­ந்து­கொள்ளுவ­தற்கு அதிக வாய்ப்­பு­கள் உண்டு. இத­னால் இர­வில் உணவு உட்கொண்ட பின் உறங்க செல்­வ­தற்கு முன் பற்­களை நன்­றாக துலக்க வேண்டும்.

பற்களை துலக்­கு­வ­தற்­கான முக்­கிய காரணம், உணவுப் பதார்த்­தங்கள் முர­சு­களில் படியாமல் இருப்­­ப­தற்­காக. பற்கள் துலக்­கு­வ­தற்கென்­று பல முறைகள் உண்டு. இவை ஒவ்­வொ­ருக்கும் வித்­தி­யா­ச­ப்­படும். இவை குறித்து படங்­களில் பார்த்­தால் நன்­றாக விளங்கும்.

   

அ­நே­க­மா­ன சிறு­வர்­க­ளுக்கு பற் கள் சொத்­தை­யா­வ­தற்கு காரணம் உண­வு உட்­­கொள் ளும் போது இடை ­­யிடை­யே இனிப்­பான பண்­டங்­களை உட்கொள்­ளுதல். பற்களில் துளை ஏற்­படக் காரணம்.உணவு உட்­கொண்ட உட­னே நாங்கள் பற்­களை துலக்கி அவற்றை அகற்­றி­னால் உணவு பதார்த்­தங்­கள் பற்க­ளிலிருந்து உட­னே ­அ­கற்­றப்­ப­டும். இத­னால் அவை பற்களில் படிய வாய்ப்­பில்லை.  

 

பற்­களில் உணவுப் பதார்த்­தங்­கள் நீண்ட நேரம் படிந்­திருந்து அமிலம் பற்­களை கரை­ய­ச்செய்வதால் பற்களில் உணவுப் பதார்த்­த­ங்கள் படி­வதால் இலகுவில் பற்கள் சொத்தையா­வ­தற்­கான அதிக வாய்ப்­புகள் உண்டு. பற்­களை துலக்­கு­வதன் மூலம் இத­னை தடுத்துக்­கொள்­ளலாம்.  

 

 

சிறார்­க­ளுக்கு எப்­படி பற்­களை துலக்­க­ வேண்டும்?

சிறார்களுக்­கான பற்­தூரிகையை பயன்­ப­டுத்தி பயற்றம் பருப்பின் அள­வுக்கு பற்­ப­சையை எடுத்து துலக்க வேண்டும். முக்­கி­ய­மாக புளோரைட் அடங்­கிய பற்­ப­சையை பயன்­ப­டுத்த வேண்டும். பற்­சிதைவு ஏற்­ப­டுத்­து­வதை தடு­க்கக் கூடியது.

சிறு­வர்­க­ளுக்கு மிகக்குறை­வான புளோ­ரைட்டை பயன்­ப­டுத்த வேண்டும் அதிகளவில் பயன்­ப­டுத்­தினால் பற்­களில் படிந்து பற்சிதைவு ஏற்­ப­டும் வாய்ப்­பு­கள் உண்டு. எனவே, கூடியவரை சிறார்­க­ளுக்கு மிக குறை­வாக பற்­பசையை பயன்­ப­டுத்­த ­வேண்டும். 

பல்நோயை எடுத்துக்கொண்­­டால் பற்­சிதைவு, முர­சு அழற்சி முக்­கி­ய­மாக உணவு உட்­கொண்டு 48 மணித்தியாலங்களில் உணவு பொருட்­களில் உள்ள கல்­சியம் பற்­களில் இறுக்­க­மாக படிவதால், நாங்கள் பற்­களை எவ்­வ­ளவு துலக்­கி­னாலும் அவற்றை அகற்ற முடி­யாது.பல் வைத்­தி­யரை நாடி சிகிச்சை மூலம் இந்த காவி­ ப­டி­தலை அகற்றிக் கொள்­ள வேண்­டும். அகற்­றிய பின் மீண்டும் காவி படிய அதிக வாய்ப்­புகள் உண்டு.

சில நாட்கள், வருடங்கள் சென்ற பிறகு முர­சுகளுக்கு கீழே அமைந்­துள்ள அமி­லம் பற்கள் இருக்கும் எலும்­பு­களை தாக்கி கரையும் போது பற்­களின் வேர் வெளியில் தெரி­யும்­போ­து, பாது­காக்­க­ வேண்டும்.அதிக குளி­ரா­க, அதிக வெப்­ப­மான உண­வு­க­ளை உட்­கொள்­ளும்போது பற்கள் கூ­சும், முரசு அழற்­சி­ய­ில் கிருமித் தாக்கம் ஏற்­பட்டு உடல் இரத்­தத்தை அனுப்­பும் இரத்தம் வர அதிக வாய்ப்புக்­கள் உண்டு. இரத்தம் வந்­தாலும் துலக்­க­ வேண்டும். துலக்­கா­மல் விட்டால் படிவின் அள­வு அதி­க­ரித்து செல்­லும்.

 

நோய்கள் அற்ற சாதா­ரண நபர்கள் வைத்­தி­யரை நாட­வேண்­டுமா இது­பற்றி விளக்கம் தாருங்­கள்?

நோய்கள் அற்ற சாதா­ரண நபர்கள் ஆறு மாதத்­திற்கு ஒரு முறை பற்­களை பல் வைத்­தி­ய­ரிடம் காட்டி பரி­சோ­த­னை செய்து கொள்­ள­வேண்டும். பல் இனா­மலில் ஒரு சிறிய துளை ஏற்­பட்­ட­து­மே வைத்­தி­யரை நாடி பற்­களை சரி­செய்து கொண்டால், பற்கள் பாதிப்பு குறை­வாக இருக்கும். ஆனால், பற்­களில் உள்ளே துளை­யிட்டு சென்­ற­பிறகு சிகிச்சை பெற்­றுக்­கொண்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.  

மருந்­து­களைப் பாவித்து பற்­களிலுள்ள பக்டீரியாக்­களை அகற்றி பற்­களை சுத்தம் செய்த பிறகு செயற்கை முறையில் பற்­களை இட்­டுக்­கொள்­ளமு­டியும்.  பற்கள் ஆட ஆரம்­பித்தால் எது­வும் செய்ய முடி­யாது.அவற்றை கட்­டா­ய­மாக அகற்­ற­ வேண்டும். அகற்றி காயம் சுக­­மாகி ஆறு­வாரங்­க­ளுக்­கு பிற­கு பற்­களை கழற்­றி பொருத்திக் கொள்­ள­க்கூ­டிய வகையில் டென்­ஜரி முறை­யுள்­ள­து.

நிரந்­த­ர­மாக இருக்கும் வகையில் செய்து கொள்­ளலாம். அதா­வது எலும்­பு­க்குள் ஸ்­குருப் போட்டு செய்­து­கொள்­ள­லாம்.

                    

இது இன்பால்டன் சிகிச்சை முறையாகும்.  இரண்டு பற்­க­ளுக்­கி­டையில் சொத்தை பற்கள் இருந்தால் இரு­ பக்­கத்­தி­லுள்ள பற்­களை வெட்டி பிஜி செய்­து ­கொள்­ளலாம். செயற்கை பற்­களை செரி­மிக்கில் செய்­கிறோம். பற்­களை விட கடி­ன­மாக இருக்கும். இன்­பால்­டன், டென்­ஜ­ரி, பிஜி ஆகிய மூன்று முறை­களில் சிகிச்சை அளித்­து­வ­ரு­கிறோம். 

பற்கள் முன்­­னுக்கு வரு­வ­தற்­கான காரணம் என்ன?

எலும்­பு­களில் இடங்கள் போதாமை அல்­லது எலும்பு தடிப்­புக்கும் பற்­களின் தடிப்­புக்கும் முரண்­பா­டாக காணப்­ப­­டுதல். தாடை எலு­ம்புகள் சிறி­தாக இருந்தால், பற்­கள் ஒரு முறையில் அமைந்­தி­ருக்­காது.பற்களில் இடம் இல்­லா­ததால் பற்­களை அகற்றி கம்பி போட்டு சரி­செய்து கொள்­ளலாம் அல்­லது மேல் தாடை சிறி­தா­கவும் கீழ் தாடை பெரி­தா­கவும் இருத்தல். 

இல்­லா­விட்டால் மேல் தாடை பெரி­ய­தா­கவும் கீழ் தாடை சிறி­தா­கவும் இருத்­தல். தாடை­களை வெட்­டி சத்­தி­ர­சி­கிச்சை செய்து சரி­செய்து கொள்­ள­வேண்டும்.பற்கள் பிரச்­சினையாக இருந்தால் கம்பியிட்டு சரி­செய்து கொள்­ள­வேண்டும். தாடை பிரச்­சி­னை­யாக இருந்தால் சத்­தி­ர­கி­சிச்சை செய்து கொள்­ள­ வேண்டும். 

பாற்பற்கள் இல்­லாத நிலையில் நிரந்தர பற்கள் வந்த பிறகு இந்­த சிகிச்சை பெற்­று­க்கொள்­வது நல்­லது.12 வயதில் தான் கம்பியிட்டு சிகிச்சை செய்­கிறோம். பொது­வாக கம்­பி­போட்டு 12 மாதங்கள் தொடக்கம் 18 மாத காலம் வரை சிகிச்சை வழங்­கப்­படும். 

மேல் பல் ஒன்­­று உள்ளே தள்ளி இருந்தால் கம்பியிட்டு சரி­செய்து கொள்­ளலாம். ஒவ்­வொரு பிரச்­சி­னையைப் பொறுத்து சிகிச்சை முறை அமையும். பொது­வாக ஆறு வயதில் இருந்து செய்கிறோ­ம். 

கர்ப்­பிணித் தாய்மார்கள் எப்­ப­டி சிகிச்சை பெற்­று­கொள்ள வேண்டும்?

கர்ப்­பிணித் தாய்­மார்கள் பிர­­­சவ நேரத்­தில் பற்­களில் பிர­ச்சி­னை­யி­ருந்தால் அதிக நோய் தாக்­கத்­திற்­குட்­ப­டு­வார்­கள். இதைத்­ த­டுப்­ப­தற்­காக கர்ப்பம் தரித்த காலத்தில் சிகிச்சை பெற்­றுக்கொள்­ள­ வேண்டும் இவர்­களின் பற்­களை பரி­சோ­தித்­து சொத்தை பற்­களை அகற்றி பற்­ து­­ளை­களை அடைத்து பற்­களை சுத்தம் செய்ய­வேண்­டும். 

மேல­திக விப­ரங்­க­­ளுக்­கு; 
Dr .Suresh Shanmuganathan,

BDS (SL), MS(Col), FDSRCS (Eng),  
MSurg DentRCS(Ed), FIAOMS
Apollo Hospital, Colombo.

 

(Visited 259 times, 1 visits today)

Post Author: Giri