உலக நுண்ணுயிர் கொல்லி விழிப்புணர்வு வாரம்

லக நுண்ணுயிர்க் கொல்லி வாரம் ( World Antibiotic Awareness Week) நவம்பர் 14 – 20 வரை அனுஷ்டிக்கப்படுகிறது. 68 ஆவது உலக சுகாதார சபை அமர்வு  2015 மே மாதம் கூடியபோது நுண்ணுயிர்  கொல்லி பயன்பாடு பற்றி உலக மக்களை ஒரு விழிப்புணர் ஏற்படுத்தும் விதமாக உலக நுண்ணுயிர்க் கொல்லி வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

aawஉலக மக்களிடையே நுண்ணுயிர்க் கொல்லியின் பாவனையை பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச மருந்தாளர்கள் சம்மேளனம் முதலான அமைப்புகள் இணைந்து இவ்வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.  2016 இற்கான உலக நுண்ணுயிர்க் கொல்லி வாரத்தின் தொனிப்பொருள் 'நுண்ணுயிர் கொல்லிகளை கவனமாக கையாள்வோம்'  என்பதாகும்.


Antibiotic (நுண்ணுயிர்க் கொல்லி) என்றால் என்ன?

பக்ரீறியா என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த பக்ரீறியாக்களில் சில வகைகயானவை நமக்கு நோய்களை விளைவிக்கும் கிருமிகளாக உள்ளன. சில பக்ரீறியாக்கள் மரணத்தையும் விளைவிக்கும்.
எனவே,  நோய்களை ஏற்படுத்தும் பக்ரீறியாக்களை கட்டுப்படுத்த அல்லது அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளே நுண்ணுயிர்க் கொல்லிகள் என அழைக்கப்படுகின்றன.


இதில் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், வைரஸினால் ஏற்படும் நோய்களை நுண்ணுயிர்க்கொல்லிகள்  குணப்படுத்த மாட்டா. சிலவேளைகளில் அபாயகரமான விளைவுகளையும்  நுண்ணுயிர்க் கொல்லிகள் ஏற்படுத்தக்கூடும்.சுhதாரண தடிமன், இருமல், சில வகையான தொண்டைப் புண் போன்றவற்றுக்கு எக்காரணம் கொண்டும் நுண்ணுயிர்க் கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது.
நுண்ணுயிர்க் கொல்லிகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதால் அவற்றுக்கு ஏற்ப பக்ரீறியாக்கள் தம்மை மாற்றிக்கொண்டு வாழத் தொடங்குகின்றன.

அதாவது நுண்ணுயிர்க் கொல்லிக்கு எதிராக 'எதிர்ப்பு' தன்மையுடன் வாழப் பழகிக் கொள்கிறது. Anti Biotic Resistance எனும் இவ்விடயம் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய விடயமாகும்.தற்போது பல நுண்ணுயிர் கொல்லி மருந்துக்கள் பக்ரீறியாவுக்கு எதிரான தொழிற்பாட்டில் தோல்வியைக் கண்டுள்ளன. இந்நிலை நீடிக்குமென்றால் சாதாரண பக்ரீறியா தொற்றுகளும் மரணத்தில் முடியலாம். அத்துடன் பல சத்திரசிகிச்சைகள் நோய் தொற்றுக்கு உள்ளாகி தோல்வியில் முடியக்கூடும்.


எனவே நம்மையும் எதிர்கால நமது சந்ததியினரையும் காப்பற்ற நாம் நுண்ணுயிர்க் கொல்லிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது அவசியமாகும்.

•    எப்பொழுதும் வைத்தியரின் சிபாரிசு இன்றி நுண்ணுயிர்க் கொல்லிகளை பாவிக்கக்கூடாது.

•    வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர்க் கொல்லிகளை முழுவதுமாக நோய் குணம் கண்டிருந்தாலும் குடித்து முடிக்க வேண்டும்.

•    வேறொருவருக்கு பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளை எக்காரணம் கொண்டும் நாம் பாவிக்க கூடாது.

•    பழைய மருந்து சீட்டை காண்பித்து நுண்ணுயிர் கொல்லி வாங்கக் கூடாது.

•    மிக முக்கியமாக மருந்தகங்கள் நுண்ணுயிர் கொல்லிகளை புதிய மருந்து சீட்டு (Pசநளஉசipவழைn) இல்லாமல் விநியோகிக்கக்கூடாது.

•    ஒவ்வொரு முறையும் நீங்கள் மருந்து வாங்கும்போது நுண்ணுயிர் கொல்லி பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என்பதை மருத்துவர் மருந்தாளர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

ப.சுந்தரேஷன்,
மருந்தாளர்,
ஆயுட்கால உறுப்பினர்,
அகில இலங்கை மருந்தாளர் சம்மேளனம்

                                    

(Visited 87 times, 1 visits today)

Post Author: Giri