ஹற்றன் நஷனல் வங்கி ‘கெமி­பு­பு­துவ’ வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் மாநா­டு­ மற்றும் விரு­து­வ­ழங்கல் விழாவை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­யது

ஜொனதன் அலஸ் HNB யின் முகாமைத்துவ இயக்குனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி), திமல் பெரேரா (பிரதி பொது முகாமையாளர் – சில்லறை மற்றும் வியாபார வங்கி), சிரந்திகுரே (பிரதி பாது முகாமையாளர் மனித வளம்), ஜூட் பெர்னாண்டோ (உதவி பொது முகாமையாளர்- SME பிரிவு) ஆகியோர் ‘கெமிபுபுதுவ’ மற்றும் ஜே.கிறிஷாந்த ஆர்.குரே ஞாபகார்த்த விருதுகளை வெற்றிபெற்ற வெளிக்கள உத்தியோகத்தர்களுடன்.

ஹற்றன் நஷனல் வங்கி,அதன் பிர­தான நுண்­நி­தி­யியல் திட்­ட­மான ‘கெமி­பு­பு­துவ’ (கிரா­மிய மறு­ம­லர்ச்சி) திட்­டத்தின் 27ஆவது வெற்­றி­க­ர­மான ஆண்டு நிறைவு விழாவை, வரு­டாந்த வெளிக்­கள உத்­தி­யோ­கத்தர் மாநாட்டில் கொண்­டா­டி­யது. இதில் கல்­வி­மற்றும் சுய­முன்­னேற்ற நிகழ்ச்­சி­க­ளுடன் பிர­தான அம்­ச­மாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் வெளிக்­களப் பணி­களில் சிறப்­பான பங்­க­ளிப்பை வழங்­கிய வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களை கௌர­விக்கும் விருது வழங்கும் வைப­வமும் இடம்­பெற்­றது. HNB யின் முகா­மைத்­துவ இயக்­கு­நரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஜொனதன் அலஸ், சிரேஷ்ட முகா­மைத்­துவ அதி­கா­ரிகள் உட்­பட பலரும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டனர்.
 

சுய­தொழில் திட்­டங்­க­ளுக்கும், கிரா­மப்­பு­றங்­களில் சிறு­தொழில் திட்­டங்­க­ளுக்கும் விரி­வான நிதிச்­சே­வை­களை வழங்கும் முக­மாக 1989 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘கெமி­பு­பு­துவ’ நிகழ்ச்­சித்­திட்­ட­மா­னது, இலங்­கையில் வர்த்­த­க­வங்கி ஒன்­றினால் ஆரம்­பிக்­கப்­பட்டு, மிகவும் வெற்­றி­க­ர­மான நுண்­நி­தி­யியல் திட்­ட­மாக உரு­வெ­டுத்­துள்­ளது. 
 

இத்­திட்­டத்­திற்கு வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் வழங்­கி­வரும் முக்­கி­ய­மான பங்­க­ளிப்­பு­ கு­றித்து கருத்து வெளி­யிட்ட HNB யின் முகா­மைத்­துவ இயக்­கு­நரும், பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஜொனதன் அலஸ், “கெமி­பு­பு­துவ வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் கிரா­மிய சமூ­கத்­துடன் நேரடித் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளது வாழ்க்கை முறை மற்றும் பொரு­ளா­தார தேவைகள் குறித்து நன்­க­றிந்து இத்­திட்­டத்தின் பல்­வேறு பகு­தி­க­ளையும் திற­மை­யான முறையில் செயற்­ப­டுத்­து­வ­தற்கு மிக முக்­கி­ய ­பங்­கினை ஆற்­றி­யுள்­ளார்கள். சிறி­ய­மற்றும் நடுத்­த­ர­தொ­ழில் முனை­வோ­ருக்குத் தகுந்த உத­வி­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு அவர்கள் ஆற்­றிய முயற்­சி­க­ளுக்கு வங்கி தனது பாராட்­டு­களை தெரி­விக்­கி­றது” எனக் குறிப்­பிட்டார்.
 

‘கெமி­பு­பு­துவ’ திட்­ட­மா­னது அதன் தனித்­து­வ­மான செயல்­வ­கைக்­காக புகழ்­பெற்­றி­ருப்­ப­துடன், அது­வெ­ளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களை கிரா­மிய சமூ­கத்­துடன் நேர­டி­யான தொடர்­பினை ஏற்­ப­டுத்தச் செய்து, அவர்­க­ளு­ட­னான நெருக்­க­மான அணு­கு­மு­றையின் மூலம், அவர்­க­ளு­டைய பலம் மற்றும்  தேவைகள் குறித்து நன்­க­றிந்து, அவர்­களை வெற்­றி­க­ர­மான நுண் தொழில் முனை­வோ­ராக உரு­வாக்­கு­வ­தற்­கான பொருத்­த­மான நிதித் திட்­டங்­களை வழங்கி அவர்­களை ஊக்­கு­விக்­கி­றது.
 

2014 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் மிகத்­தி­ற­மை­யாக தம­து­செ­யற்­பா­டு­களை வெளிப்­ப­டுத்­திய வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களை கௌர­விக்கும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட  இவ்­வி­ருது வழங்கல் விழா­வா­னது, HNB யின் முகா­மைத்­துவ இயக்­கு­னரும், பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஜொனதன் அலஸ் தலை­மையில் நடை­பெற்­றது.மறைந்த HNB யின் முன்னாள் தலைவர் ஜே. கிறி­ஷாந்த ஆர். குரேயின் ஞாப­கார்த்­த­மாக, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களின் சிறந்­தநுண் நிதி­யியல் அதி­கா­ரி­க­ளாக முறையே தெரிவு செய்­யப்­பட்ட உடப்பு கிளையின் ரொமேஷ் வெண்டோர்ட் மற்றும் ஹோமா­கம கிளையின் நளின் பர­ண­வி­தான ஆகி­யோ­ருக்கு புலமைப் பரி­சில்கள் வழங்­கப்­பட்­டன.

(Visited 113 times, 1 visits today)

Post Author: Giri