Ceylinco Life இன் 2015 ஆம் வருட ஆண்­ட­றிக்கை நியூ­யோர்க்கில் ARC விரு­து­களைத் தட்டிக் கொண்­டது

MerCommInc இனால் நியூயோர்க் நகரில் வழங்­கப்­பப்­பட்ட மதிப்புமிக்க ARC விரு­து­களில், ஆயுட் காப்­பு­றுதி முன்­னோ­டி­யான Ceylinco Life  நிறு­வனம் நிதி வெளிப்­ப­டுத்­தலில் தனது திற­மையை உறு­திப்­ப­டுத்தி, அதன் 2015 ஆம் வருட அதி­சி­றந்த ஆண்­ட­றிக்­கைக்­காக இரண்டு முக்­கிய கௌரவ விரு­து­களை வென்­றெ­டுத்­துள்­ளது.
 

விரு­து­களின் ‘காப்­பு­றுதி – ஆயுள்,சுகா­தாரம் பிரிவில் நிதி தர­வு­க­ளுக்­காக வெள்ளி விரு­தையும் ‘பாரம்­ப­ரிய வரு­டாந்த அறிக்கை’ வகையில் அதே பிரிவில் ‘Honors’  விரு­தையும் பிளாசா ஹோட்­டலில் நடை­பெற்ற விருது வழங்கல் வைப­வத்தில் இந்­நி­றுனம் வென்­றெ­டுத்­துள்­ளது.
‘உங்கள் ஆயுட் காப்­பு­று­தி­கா­ரரை அறிந்து கொள்­ளுங்கள்’ என்ற தொனிப் பொருளில் வெளி­யி­டப்­பட்ட Ceylinco Life இனது 2015ஆம் வருட ஆண்­ட­றிக்­கை­யா­னது கடந்த ஆண்டில் அமு­லுக்­கு­வந்த 2011 ஆம் ஆண்டின் காப்­பு­றுதித் தொழில் (திருத்த) 3 ஆம் இலக்கச் சட்­டத்தின் 53 ஆவது பிரிவின் கீழ் ஆயுளும் பொது காப்­பு­று­தியும் வெவ்வேறு வணிக அம்­சங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டதன் பின்னர் வெளி­வந்த முத­லா­வது ஆண்டறிக்கை­யாகும்.

 

218 பக்க கார்பன் அற்ற இந்த ஆண்­ட­றிக்கை GRI G4  நிலை­யான அறிக்­கை­யிடல் வழி­காட்­டல்கள், Smart Integrated Reporting MethodologyTM, International Integrated Reporting Framework, இலங்கை பட்­டய கணக்­காளர் நிறு­வ­னத்தின் வழி­காட்­டல்கள் ஆகி­ய­வற்றைப் பயன் படுத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 

ஆண்­ட­றிக்­கை­யா­னது ஒரு கம்­ப­னியின் மிக முக்­கிய தொடர்­பாடல் சாத­ன­மாகும். அதன் பங்­கு­தா­ரர்­க­ளு­ட­னான தொடர்­பா­டல்­களில் வெளிப்­படைத் தன்­மைக்­கான கம்­ப­னியின் அர்ப்­ப­ணிப்பை அது காண்­பிக்­கி­றது என்று Ceylinco Life  இன் முகாமைப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஆர்.ரெங்­க­நாதன் தெரி­வித்தார். வெற்­றி­யா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­குமுன் உலகம் முழு­வ­தி­லு­மி­ருந்து கிடைக்கப் பெற்ற ஆண்­ட­றிக்­கை­களை பரி­சீ­லனை செய்த நம்­ப­க­மான சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றி­ட­மி­ருந்து இந்த விரு­து­களைப் பெறு­வதில் நாம் மகி­ழச்சி அடை­கிறோம் என்றும் அவர் கூறினார். 
 

Annual Report Companyapd யின் Smart Media அ­திபர் டாக்டர் விஜித் கன்­னங்­கர கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­தா­வது:
Ceylinco Life இன் இந்த கன்னி ஆண்­ட­றிக்கை இலங்­கையில் காப்­பு­றுதி வகை­ய­றாவில் புத்­து­ணர்ச்­சியூட்டும் புதி­ய­தொரு தரத்தை முன்­னி­லைப்­ப­டுத்­து­கி­றது என்று கூறினார். பல்­வ­கைப்­பட்ட கூறு­களை உள்­ள­டக்­கிய தக­வலின் தெவிட்­ட­ளவில் முக்­கிய விட­யங்­களை நீர்த்துப் போகச் செய்­யாமல் அவற்றில் கவனம் செலுத்­து­கி­றது.”

 

2016ஆம் வருட MerComm விருது வழங்கல் போட்­டிக்கு 60 நாடு­க­ளி­லி­ருந்து விண்­ணப்­பங்கள் அனுப்­பப்­பட்­டி­ருந்­தன. ஒவ்­வொரு ஆண்­ட­றிக்­கையும் அதன் கம்­ப­னி­யி­னது கதையைப் பரி­மாறிக் கொள்­வதில் அதன் வெற்­றியை அடிப்­ப­டை­யாக வைத்­து ­ம­திப்­பீடு செய்­யப்­பட்­டது. கம்­ப­னியின் இலாபம் அல்­லது உற்­பத்­தியை அடிப்­ப­டை­யாக வைத்து அறிக்கை மதிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆனால்,ARC விருது வழங்­கலில் ஆக்­கத்­திறன், தெளிவு, பயன்­பாடு, மகத்­துவம் ஆகி­ய­வற்றின் பெறு­ம­திகள் அடிப்­ப­டை­யாக கொள்­ளப்­பட்­டன. 
 

ஆண்­ட­றிக்­கை­களில் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­பட்ட விட­யங்­களில் மேலு­றையின் வடி­வ­மைப்பு, தலை­வரின் கடிதம், உட்­பு­ற­வ­டி­வ­மைப்பு, எழுத்­துருப் பகு­தியின் தெளி­வா­ன­தன்மை, கம்­ப­னியின் தகவல் முன்­வைப்பு,நிதித் தர­வுகள் வெளிப்­ப­டுத்தல், எவ்வளவு சிறப்பாக நிறுவனத்தின் மனப்பாங்கு பகிர்ந்து கொள்ளப்படுதல் ஆகியன சிலவாகும். முதல் 30 சதவீத புள்ளிகளைப் பெறும் ஆண்டறிக்கைகளுக்கு அதிவிசேட சாதனைக்காக சிறப்புமதிப்பு, வெண்கல, வெள்ளி, தங்கச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 

(Visited 65 times, 1 visits today)

Post Author: Giri