‘வெறும் மேசையில் தாளம்போட்டுக் காட்டியவுடன் இவன் வருவான் என்ற நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார்’- பஞ்சு அரு­ணா­ச­லத்­து­ட­னான தனது அனுபவம் குறித்து இசை­ஞானி இளை­ய­ராஜா

இசை­ஞானி இளை­ய­ரா­ஜாவை திரை­யு­ல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் பஞ்சு அரு­ணா­சலம். பிர­பல திரைப்­படத் தயா­ரிப்­பா­ளரும் இயக்­கு­நரும் கதா­சி­ரி­யரும் பாட­லா­சி­ரி­ய­ரு­மாக விளங்­கிய பஞ்சு அரு­ணா­ச­லம், திரைக்­கதை எழுதி 1976 ஆம் ஆண்டு வெளி­யான அன்­னக்­கிளி படம் தான் இளை­ய­ராஜா இசை­ய­மைத்து வெளி­யான முதல் திரைப்­படம்.

இளை­ய­ரா­ஜாவின் நண்பர் ஆர்.செல்­வராஜ் அப்­ ப­டத்­துக்கு கதை எழு­தி­யி­ருந்தார். தேவராஜ் மோகன் படத்தை இயக்­கினார்.

                                                           

 

பஞ்சு அரு­ணா­சலம் அவர்­க­ளு­ட­னான அறி­முகம் பற்றி இசை­ஞானி இளை­ய­ராஜா விளக்­கி­யுள்ள சுவை­யான சம்­ப­வங்­களின் நினை­வ­லைகள்:-

''நாங்கள் சினி­மாவில் இசை­ய­மைக்க முயற்சி செய்­து­கொண்­டி­ருக்கும் வேளையில் அண்ணன் பாஸ்கர் எனக்­காக நிறைய நடந்­தி­ருக்­கிறார். யாரா­வது புதி­தாக ஒரு கம்­பனியை தொடங்­கி­யி­ருந்தால் அங்கு போய் வாய்ப்புக் கேட்டு நிற்பார் பாஸ்கர். அது போலி­யான கம்­பெ­னி­யாகக் கூட இருக்­கலாம்.

'சார் என் தம்பி நல்லா மியூசிக் பண்­ணுவான். அவ­னுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க' என்று போய்க் கேட்பார். நான் எந்த கம்­பனிக்கும் போய் வாய்ப்புக் கேட்­ட­தில்லை. அப்­போது நாங்கள் இசைக்­குழு வைத்து மெல்­லிசைக் கச்­சேரி நடத்திக் கொண்­டி­ருந்தோம்.

அப்­போது நிறைய புது­முக இயக்­கு­நர்கள் வந்­து­ கொண்­டி­ருந்­தார்கள். வி.சி.குக­நா­தன், எஸ்.பி.முத்­து­ரா­மன், தேவராஜ் மோகன் போன்­ற­வர்கள் வந்­த ­நேரம் அது.

இவர்­க­ளை­யெல்லாம் ஒரு கல்­யாண மண்­ட­பத்­துக்கு வர­வ­ழைத்து நான் கம்போஸ் செய்த பாடல்­களைப் பாடிக்­காட்டி வாய்ப்புக் கேட்டோம். வந்­த­வர்கள் எல்­லோரும் சரி பார்க்­க­லாம், பாட்டு நல்­லா­ருக்­கு, என்று சொல்­லி­விட்டுச் சென்­றார்­களே தவி­ர, அந்த இயக்­கு­நர்கள் யாருக்கும் இந்த இளை­ய­ரா­ஜாவைத் தெரி­ய­வில்லை.

அதுவும் நான் இந்­தந்த பாட்டு பண்­ணி­யி­ருக்கேன். லட்டு பண்­ணி­யி­ருக்­கேன், பூந்தி பண்­ணி­யி­ருக்­கேன், காரம் பண்­ணி­யி­ருக்­கேன்னு காட்­டின பின்­னாடி கூட இது நன்­றாக இருக்­கி­ற­தென்று தெரி­ய­வில்லை.

ஆனால் என் நண்பன் ஆர்.செல்­வ­ராஜ், பஞ்சு அரு­ணா­ச­லத்­திடம் ‘என் நண்பன் ஒருத்தன் ஜி.கே. வெங்­க­டேஷ்­கிட்ட உத­வி­யா­ளரா இருக்கான். நல்லா மியூசிக் பண்­ணுவான். நீங்க ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ என்று கேட்­டி­ருக்­கிறான். அவர் அப்­போது சின்ன படங்­க­ளுக்கு எழுதிக் கொண்­டி­ருந்தார்.

சரி வரச்­சொல்லு பார்க்­கலாம் என்று அவர் சொல்­லி­யி­ருக்­கிறார். மாம்­ப­லத்தில் ஒரு சிறிய அறையில் லுங்­கியும் பனி­யனும் மட்டும் அணிந்து உட்­கார்ந்­தி­ருந்தார் பஞ்சு சார். ரொம்­பவும் சின்ன அறையில் ஒரே ஒரு டேபிள் மட்டும் இருந்­தது. லேசான மது வாடையும் சிகரெட் வாடையும் அறையில் மிதந்­தன.

‘அண்ணே நான் உங்­களைப் பாத்­தி­ருக்கேன். சபதம் படத்­துக்குப் பாட்­டெ­ழுத கவிஞர் கண்­ண­தாசன் வந்­த­போது நீங்­களும் வந்­தீங்க’ என்று நான் சொல்­லவும் ‘ஆமாம் நானும் உன்னைப் பாத்­தி­ருக்கேன். ஆமா, நீ தனியா மியூசிக் பண்­றியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘எங்கே பாடிக் காட்டு’ என்றார்.

அங்­கி­ருந்த மேசையில் நான் கம்போஸ் பண்­ணி­யி­ருந்த பாடல்­களை அவ­ருக்கு தாளம் போட்டு வாசித்­துக்­காட்­டினேன். அவர், ‘நான் கொமடி படங்­க­ளுக்­குத் தான் எழு­தி­கிட்­டி­ருக்கேன்.

நீ வாசிச்ச பாடல்­க­ளுக்­கென்று படம் எடுத்­தால் தான் பாட்­டெல்லாம் நல்­லா­யி­ருக்கும்’ என்றார். செல்­வராஜ் மருத்­து­வச்சி என்ற கதையை எழு­தினான். அந்த கதையே அன்­னக்­கிளி என்ற பெயர்­ வைத்துத் தயா­ரித்தார்.

பின்­னணிப் பாட­கர்­களைப் பாட­வைத்து ஆர்க்­கெஸ்ட்­ராவை வைத்துப் பாடிக்­காட்­டியும் அடை­யாளம் கண்­டு­பி­டிக்க முடி­யாத இயக்­கு­நர்கள் மத்­தியில் வெறும் மேசையில் தாளம்­போட்டுக் காட்­டிய உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம்.

பின்னால் நான் பெயர் பெற்றபோது அவரிடம் எப்படி நீங்கள் இளையராஜாவை அடையாளம் கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டார்கள். ‘நான் என்ன அவனை அடையாளம் கண்டுபிடிப்பது? அவன் எங்கிருந்தாலும் வந்திருப்பான்’ என்று சொன்னார். இதை நான் மறக்க முடியுமா?''

 

 

(Visited 465 times, 1 visits today)

Post Author: Giri