வரலாற்றில் இன்று…
ஜுன் – 07
1099 : முதலாவது சிலுவைப் போரில் ஜெருஸலேம் மீதான முற்றுகை ஆரம்பமாகியது.
1494 : புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உலகத்தை (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா) இரு நாடுகளுக்கும் இடையில் பிரித்துக்கொள்வது தொடர்பாக ஸ்பெய்னுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1654 : பிரான்ஸில் 16ஆம் லூயி மன்னனுக்கு முடிசூட்டப்பட்டது.
1692 : ஜமைக்காவின் போர்ட் ரோயல் நகரம் பாரிய பூகம்பத்தினால் 3 நிமிடங்களில் அழிந்தது. 1600 பேர் பலியாகினர். சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர்.
1832 : ஐரிஸ் குடியேற்றவாசிகள் மூலம் கனடாவில் கொலரா நோய் பரவியது. இதனால் சுமார் 6000 பேர் உயிரிழந்தனர்.
1862 : அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதற்கு அமரிக்காவும் பிரிட்டனும் இணங்கின.
1863 : மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிற்றி பிரெஞ்சுப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1905 : சுவீடனுடன் இணைந்த ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு நோர்வே நாடாளுமன்றம் அங்கீகாரமளித்தது.
1940 : 2ஆம் உலக யுத்தத்தின்போது நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்கோனும் முடிக்குரிய இளவரசர் ஒலாவும் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வசிக்க ஆரம்பித்தனர்.
1975 : ஆண்களுக்கான முதலாவது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது. முதல் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 202 ஓட்டங்களால் வென்றது.
1977 : பிரித்தானிய அரசி இரண்டாம் எலிஸபெத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வு நடைபெற்றன. இந்நிகழ்வுகளை தொலைக்காட்சியில் சுமார் 50 கோடி பேர் பார்வையிட்டனர்.
1989 : சூரினாம் எயார்வேஸ் விமானமொன்று சூரினாமில் விபத்துக்குள்ளானதால் 176 பேர் கொல்லப்பட்டனர்.
1995 : போயிங் 777 பயணிகள் விமானம் முதல் தடவையாக சேவைக்கு வந்தது.
2000 : இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லைகளை ஐ.நா. வரையறை செய்தது.
2006 : ஈராக்கில் அல் கைதா தலைவரான அபு முசாப் அல் ஸார்காவி, அமெரிக்க விமானப்படையினரின் தாக்குதலில் பலியானார்.
2007 : கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான தமிழர்கள் வலுக் கட்டாயமாக பொலிஸாரால் வெளியேற்றப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.