2013: இலங்கைக் கடற்­ப­ரப்பில் புயல் கார­ண­மாக சுமார் 40 மீன­வர்கள் பலி

வரலாற்றில் இன்று…

ஜுன் – 08

 

1405 : இங்­கி­லாந்தின் யோர்க் பிராந்­திய ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்­கி­லாந்தின் மன்னர் நான்காம் ஹென்­றியின் ஆணையின் பேரில் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.


fishermen-varalaru1783 : ஐஸ்­லாந்தில் லாக்கி எரி­மலை வெடிக்க ஆரம்­பித்து 8 மாதங்­க­ளாக குழம்பை கக்­கி­யது. இதன் விளை­வாக  9,000 பேர் பலி­யா­னதுடன் 7 வரு­ட­கால பஞ்சம் ஆரம்­பித்­தது.


1887 : ஹேர்மன் ஹொலரித் துளை­யிடும் அட்டை கொண்ட கணிப்­பா­னுக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.


1929 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் முதற் தட­வை­யாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்­தது.


1941 : இரண்டாம் உலகப் போரில் சிரியா, மற்றும் லெபனான் மீது நேச நாடுகள்  தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.


1942 : இரண்டாம் உலகப் போரில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி, நியூ­காசில் நக­ரங்கள் மீது ஜப்­பா­னிய நீர்­மூழ்கிக் கப்­பல்கள்  குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­தின.


1972 : வியட்நாம் யுத்தத்­தின்­போது நேபாம் குண்­டுத்­தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட நிலையில் 9 வயது சிறுமி பான் தி கிம் புக் வீதியில் ஓடி­வரும் பிர­சித்தி பெற்ற புகைப்­ப­டத்தை ஏ.பி.  செய்­திச்­சேவை படப்­பி­டிப்­பாளர் நிக் உட் பிடித்தார்.

 

1953, அமெ­ரிக்கத் தலை­நகர் வாஷிங்டன் டி.சியி­லுள்ள உண­வ­கங்கள் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு உணவு பரி­மா­று­வ­தற்கு மறுக்க முடி­யா­தென அமெ­ரிக்க உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.


2014--Karachi-airport-AFPP-lane1984 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் ஓரி­னச்­சேர்க்கை சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட்­டது.


1992 : முத­லா­வது உலகச் சமுத்­திர நாள்  கொண்­டா­டப்­பட்­டது.


2007 : அட்­லாண்டிஸ் விண்­வெளி ஓடம் 7 பேருடன் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு ஏவப்­பட்­டது.


2007 : அஸ்­தி­ரே­லி­யாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்தில் இடம்­பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்­ளத்­தினால் 9 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2009 : வட­கொ­ரி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்த குற்­றச்­சாட்டில் அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வ­ருக்கு 12 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.


2013 : இலங்கைக் கடற்­ப­ரப்பில் புயல் கார­ண­மாக சுமார் 40 மீனவர்கள் உயிரிழந்தனர்.


2014: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.

(Visited 49 times, 1 visits today)

Post Author: metro