பேஸ்புக் செய்மதியுடன் வெடித்துச் சிதறிய ரொக்கெட்

அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு ஏவப்படவிருந்த ரொக்கெட் ஒன்று தீப்பற்றி வெடித்துச் சிதறியுள்ளது.

                                           

ஸ்பேஸ் ஒ எனும் தனியார் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்த ரொக்கெட் பேஸ்புக் நிறுவனத்துக்காக செய்மதியொன்றை விண் வெளிக்குகொண்டு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


                               

புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரெல் விண்வெளி ஏவு தளத்திலிருந்து நாளை சனிக்கிழமை இந்த ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்படவிருந்தது.

ஆனால், வியாழனன்று எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த ரொக்கெட் பாரிய தீப்பிளம்புடன் வெடித்துச் சிதறியது.

இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது.

 

(Visited 70 times, 1 visits today)

Post Author: Giri