ரொக்கெட் பரி­சோ­தனை நடத்தும் இலங்கை இளைஞர்

விண்­வெ­ளிக்கு ரொக்கெட் அனுப்ப வேண்டும் என்ற ஆர்வம் கோடிக்­க­ணக்­கா­ன­வர்­க­ளிடம் உண்டு.

ரொக்கெட் தொழில்­நுட்பம் குறித்து எண்­ணும்­போது, ரஷ்யா, அமெ­ரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்­தியா போன்­ற­வை தான் பலரின் மனதில் தோன்றும்.

ஆனால், இலங்­கை­யி­லி­ருந்தே விண்வெ­ளிக்கு ரொக்கெட் அனுப்பும் திட்­டத்­துடன் உள்ளார் இலங்­கையைச் சேர்ந்த ஓர் இளைஞர். 

குரு­ணாகல் மாவத்­தக­மையைச் சேர்ந்த திவங்க நெரன்ஜன் திசா­நா­யக்க (23) எனும் இந்த இளைஞர் வெறும் கனவு மாத்­திரம் காண­வில்லை.

ஏற்­கெ­னவே சிறிய அள­வி­லான குறுகிய வீச்­சு ­கொண்ட ரொக்­கெட்­களை ஏவி பரி­சோ­த­னை­களையும் ஏற்­கெ­னவே நடத்­தி­யுள்ளார்.

பெரும்­பாலும் வயல் வெளி­களில் இவரின் ரொக்கெட் பரி­சோ­தனை நடை­பெ­று­கி­றது.

வயம்ப றோயல் கல்­லூரி பழைய மாண­வ­ரான திவங்க நெரன்ஜன், தற்­போது மொரட்­டு­வை­யி­லுள்ள சிலோன் ஜேர்மன் தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வ­கத்தில் மின் பொறி­யியல் துறையில் பயின்று வரு­கிறார்.

2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து இவர் பல்­வேறு ரொக்கெட் பரி­சோ­த­னை­களை நடத்­தி­யுள்ளார்.  

இறு­தி­யாக கடந்த வரும் ஜூலை 5 ஆம் திகதி தனது 4 ஆவது ரொக்­கெட்­டான Air Touch – 03 Rocket   ஐ அவர் பரி­சோ­தித்தார்.

அது 8.5 அடி நீளமும் 6 கிலோ­கிராம் எடை­யையும் கொண்ட ரொக்­கெட்­டாகும். 

தற்­போது அவர் தயா­ரித்­துள்ள புதிய ரொக்­கெட்­டுக்கு  sky Air Touch – 01 Rocket எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

15 அடி நீளத்­தையும் ஒரு அடி விட்­டத்­தையும் கொண்ட இந்த ரொக்கெட் 100 கிலோ­கிராம் எடையைக் கொண்­டுள்­ளது.

18.5 கி.மீ. வரை உய­ரத்­துக்கு கிடையாகச் சென்று 7 கி.மீ. தூரத்தை அடை­யக்­கூ­டிய ரொக்கெட் இது­வெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

 

இலங்கைக் கொடி­யுடன் தங்க நிறத்தில் மின்னும் இந்த ரொக்­கெட்டை விரைவில் ஏவி பரி­சோ­திப்­ப­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக மெட்ரோ நியூஸுக்கு திவங்க நெரன்ஜன் தெரி­வித்தார். 

HathoR Aerospace எனும் நிறு­வ­னத்தை திவங்க நெரன்ஜன் ஸ்தாபித்­துள்ளார்.

 

இலங்­கையைத் தள­மாகக் கொண்ட முத­லா­வது ரொக்கெட் பரிசோ­தனை நிறு­வனம் இது­வெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

விண்­வெ­ளிக்கு செய்­ம­தி­யொன்றை ஏவக்­கூ­டிய ரொக்­கெட்­களை தயா­ரித்தல், இலங்­கையில் ரொக்கெட் பரி­சோ­த­னை­களை நடத்­து­தல், விமா­னங்கள், விண்­க­லங்­களை வடி­வ­மைத்தல், புதிய ரொக்கெட் மற்றும் ஜெட் இயந்­திர பொறி­முறை­களை கண்­டு­பி­டித்தல் என்­பன இந் ­நி­று­வ­னத்தின் இலக்­காகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இள­மைக்­கா­லத்­தி­லி­ருந்து ரொக்­கெட்கள் மீது ஆர்வம் கொண்­டி­ருந்த திவங்க நிரன்ஜன் திசா­நா­யக்க, சுய­மா­கவே ரொக்கெட் தொழில்­நுட்­பத்தை கற்­றுக்­கொண்­டதாக கூறு­கிறார்.

அமெ­ரிக்க விண்­வெளி முக­வ­ர­க­மான நாசா மற்றும் ஐரோப்­பிய விண்­வெளி முக­வ­ரத்தின் இணை­யத்­த­ளங்கள் ஊடக ரொக்கெட் தொழில்­நுட்பம் ஆகி­யன இதற்கு உத­வி­யாக இருந்­தன எனவும் அவர் கூறு­கிறார்.

தனது குடும்­பத்­தினர் தனது செயற்­பா­டு­க­ளுக்கு பெரும் ஆத­ர­வாக உள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

“இலங்­கையும் விண்­வெ­ளிக்கு செய்­மதி அனுப்பும் ஒரு நாடாக்க வேண்டும் என்­பதே எனது இலட்­சியம்.  

வெளி­நா­டு­களில் அல்­லாமல் இலங்­கை­யிலேயே இதை செய்ய வேண்டும் என நான் விரும்­பு­கிறேன்” என மெட்ரோ நியூஸிடம் திவங்க நெரன்ஜன் திசா­நா­யக்க கூறினார்.  

இது தொடர்­பாக அதி­கா­ரி­களும் மக்­களும் எந்த வகையில் எவ்­வ­கையில் உதவ வேண்டும் என விரும்­பு­கி­றீர்கள் எனக் கேட்­ட­போது, “விண்வெளிக்கு ரொக்­கெட்­களை அனுப்பும் நோக்­குடன் இதற்­கான ஆய்வு வச­தி­களைக் கொண்ட நிறு­வ­ன­மொன்றை ஸ்தாபித்தால் இத்­ திட்­டத்­துக்கு அது பெரும் உத­வி­யாக இருக்கும்” என அவர் தெரி­வித்தார். 

– ஆரெஸ்

SKY TOUCH – 01  ROCKE           
 •  Type – Experimental Rocket
 •  Country   Of  Origin  – Sri Lanka
 •  Designer – HathoR Aerospace
 •  Year – 2016

                          Specifications

 •  Weight – 100kg
 •  Height – 15ft
 •  Diameter – 1ft
 •  Engine – Single Stage Solid Fuel Rocket Booster (Burn Time – 180s)      
 •  Maximum Altitude – 18.5km
 •  Flight Angle (Maximum)  – 70⁰
 •  Range (Launch To Land  Distance)  – 7km
 •  Powered Ascent  – 17km
 •  Powered Ascent 17km + Coasting Flight 3km = 20km
 •  Speed – 800km/h
 •  Weight @ Landing –  80kg
 • Launch Method –  Vertical  Launch
 • Launch Platform – Mobile Launch Pad

 

 

 

(Visited 223 times, 1 visits today)

Post Author: Giri