மிஷன் இம்பொஸிபிள் 6 ஆக்ரோஷமானதாக இருக்கும் – நடிகர் டொம் குரூஸ்

மிஷன் இம்­பொ­ஸிபிள் திரைப்­பட வரி­சையின் 6 ஆவது படம் மிக ஆக்­ரோ­ஷ­மா­ன­தாக அமைந்­தி­ருக்கும் என நடிகர் டொம் குரூஸ் கூறி­யுள்ளார்.


tom-cruiseமிஷன் இம்­பொ­ஷிபிள் படத்தின் 6 ஆவது பாகத்தில் தற்­போது டொம் குரூஸ் நடித்து வரு­கிறார். கிறிஸ்­டோபர் மெக்­கோரி இப்­ப­டத்தை இயக்­கு­கிறார்.

 

2018 ஜூலை 27 ஆம் திகதி இப்­படம் வெளியாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இந்­நி­லையில், ஹொலிவூட் நடி­கரல் நடை­பெற்ற வைபவம் ஒன்றில் கலந்­து­கொண்ட டொம் குரூஸ், மிஷன் இம்­பொ­ஸிபிள் 6 படம் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், ஏற்­கெ­னவே பாரிஸ் நகரில் இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்­டுள்­ளது. இப்­படம் மிக ஆக்­ரோ­ஷ­மா­ன­தா­கவம் ரசி­கர்­க­ளுக்கு த்ரில்­லா­கவும் அமைந்­தி­ருக்கும் என்றார்.


54 வய­தான டொம் குரூஸ் ஸ்டன்ட் காட்­சி­களில் டூப் போடாமல் தானே துணிச்­ச­லாக நடித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 


கடந்த பல வரு­டங்­க­ளாக நான் பயிற்­சி­களில் ஈடு­பட்­ட­துடன், சாத்­தி­ய­மான விட­யங்கள் என்னென்ன என அறிவதற்காக ஏராளமான சோதனைகளையும் நடத் தினோம் எனவும் டொம் குரூஸ் தெரி வித்தார்.

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro