தொலைக்­காட்சி நிகழ்ச்சி தொகுப்­பா­ள­ருடன் நடிகர் ஷாருக்கான் கடும் மோதல்

sharuk2அபு­தா­பியில் தொலைக்­காட்சி நிகழ்ச்சித் தொகுப்­பாளர் ஒரு­வ­ருடன் நடிகர் ஷாருக் கான் மோதிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.


ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் உள்ள பிர­ப­ல­மான பொழு­து­போக்கு அரபு தொலைக்­காட்சி அலை­வ­ரிசை நிகழ்ச்சி தொகுப்­பா­ள­ராக எகிப்­திய நடிகர் ரமீஸ் கலால் உள்ளார்.

 

இவர் நடத்தும் ‘ரமீஸ் பி ஏலா அப் பித் நார்’ எனும் வேடிக்­கை­யாக அச்­சு­றுத்தும் நிகழ்ச்­சி­யா­னது பொது­மக்­க­ளி­டையே மிகவும் பிர­பலம்.


பொது இடத்தில் போலி­யாக பயங்­க­ர­வா­தி­களை உரு­வாக்கி தனி­ந­பர்­களை உண்­மையில் கடத்திச் செல்­வ­து­போல காட்­சிகள் அமைத்து தத்­ரூ­ப­மாக ஒளி­ப­ரப்பு செய்­யப்­படும்.

 

அது­மட்­டு­மல்­லாமல் அமீ­ர­கத்­துக்கு வருகை தரும் பிர­ப­லங்­களை சீண்டி அச்­சு­றுத்­தும்­வி­த­மாக விளை­யாடி, அத­னையும் டி.வி.யில் ஒளி­ப­ரப்­பு­வார்கள். 


புதை­கு­ழியில் விழுந்த ஷாருக்கான்

சில நாட்­க­ளுக்கு முன்பு அபு­தாபி பாலை­வனப் பகு­திக்கு இந்தி நடிகர் ஷாருக்கான் சென்றார். இவ­ரது வரு­கையை முன்­கூட்­டியே தெரிந்­து­கொண்ட நிகழ்ச்சி தொகுப்­பாளர் ரமீஸ் கலால், ரக­சி­ய­மாக படக்­கு­ழு­வி­ன­ருடன் அந்த பாலை­வன பகு­திக்கு வந்தார். அங்கு யாருக்கும் தெரி­யாமல் செயற்கை புதை­கு­ழியை வெட்­டினார்.

 

அந்த இடத்தில் நடிகர் ஷாருக்கான் ஒரு பெண்­ணுடன் செல்லும் வகையில் சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தி அந்த புதை­கு­ழியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் உடன்­வந்த பெண்ணை விழ­வைத்தார்.

sharuk-2

இதைத்­தொ­டர்ந்து ராட்­சத பல்லி உருவ முக­மூடி அணிந்­து­வந்து ஷாருக்­கானை ரமீஸ் கலால் பய­மு­றுத்­தினார். சிறிது நேரத்தில் முக­மூ­டியை கழற்­றிய அவர்,  ‘ஹாய் ஷாருக்கான், இது ஒரு டி.வி.ஷோ’ என கூறி­யதும் நடிகர் ஷாருக்கான் கடும் கோபம் அடைந்தார்.


sharukஅப்­போது ஷாருக்கான் அவரை தடுத்து சத்தம் போட்டார். அதோடு அவரை கீழே தள்ளி அவர் மீது ஏறி அமர்ந்து ‘இப்­ப­டித்தான் செய்ய வேண்­டுமா? இனிமேல் இது­போல செய்­வாயா? என கேட்டார். பின்னர் அவரை தரையில் இழுத்­துக்­கொண்டே சென்றார். அவரை எழுப்பி மீண்டும் கோபத்­துடன் காலால் இடறி கீழே தள்­ளினார்.


இனி இது­போல செய்­வாயா? என ஷாருக்கான் தொடர்ந்து கேட்­டுக்­கொண்டே இருந்தார்.

 

அவ­ரது கோபத்தை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்­பாளர் ரமீஸ் கலால், நடிகர் ஷாருக்­கா­னிடம் மன்­னிப்பு கேட்டார். சிறிது நேரம் கழித்து அவரை மன்­னித்­து­விட்­ட­தாக ஷாருக்கான் தெரி­வித்தார்.


இதனால் அந்த பகு­தியில் சிறிது நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. இந்த நிகழ்ச்சி அதே டி.வி.யில் ஒளி­ப­ரப்­பா­னது. இதைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கி­றது

(Visited 213 times, 1 visits today)

Post Author: metro