1991 : கொக்கட்டிச்சோலையில் 152 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

வரலாற்றில் இன்று…

ஜுன் – 12

 

1429 : நூறாண்டுப் போர் காலத்தில் ஜோன் ஒஃப் ஆர்க் தலை­மையில் பிரெஞ்சு இரா­ணுவம் ஆங்­கி­லே­யர்­க­ளிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்­பற்­றியது.


1775 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரின்­போது பிரித்­தா­னிய இரா­ணுவத் தள­பதி தோமஸ் கேஜ் மசா­சுசெட்ஸ் மாநி­லத்தில் இரா­ணுவச் சட்­டத்தைப் பிறப்­பித்தார். தமது ஆயு­தங்­களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடி­யேற்­றக்­கா­ரர்­க­ளுக்கும் மன்­னிப்பு அளிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது.


1830 : 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்­ஜீ­ரி­யாவை அடைந்­ததில் இருந்து பிரெஞ்சுக் குடி­யேற்றம் அந்­நாட்டில் ஆரம்­ப­மா­கி­யது.


Kokkaddicholai1898 : ஸ்பெயி­னி­ட­மி­ருந்து சுதந்­திரம் அடை­வ­தாக பிலிப்பைன்ஸ் அறி­வித்­தது.


1899 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் விஸ்­கொன்சின் மாநி­லத்தைத் தாக்­கிய சூறா­வ­ளியில் 117 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1902 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் நான்கு மாநி­லங்­களில் பெண்கள் பொதுத்­தேர்­தலில் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட்­டனர். அவுஸ்­தி­ரே­லியப் பழங்­கு­டிகளுக்கு வாக்­க­ளிக்கும் உரிமை மறுக்­கப்­பட்­டது.


1934 : பல்­கே­ரி­யாவில் அர­சியற் கட்­சிகள் தடை செய்­யப்­பட்­டன.


1935 : பொலீ­வி­யா­வுக்கும் பரா­கு­வே­யிற்கும் இடையில் அமைதி உடன்­பாடு எட்­டப்­பட்டு மூன்­றாண்­டுகள் போர் முடி­வுக்கு வந்­தது.


1940 : இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்­தா­னிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்ஸில் ஜெர்­ம­னி­ய­ரிடம் சர­ண­டைந்­தனர்.


1943 : நாசி ஜேர்­ம­னியர் மேற்கு உக்­ரைனில் 1,180 யூதர்­களைப் படு­கொலை செய்­தனர்.


1964 : தென் ஆபி­ரிக்க நீதி­மன்றம் நெல்சன் மண்­டே­லா­வுக்கு ஆயுட்­கால சிறைத்­தண்­டனை விதித்­தது.


1967 : சோவியத் ஒன்­றியம் “வெனேரா 4” விண்­க­லத்தை வெள்ளிக் கோளை நோக்கி ஏவி­யது. வேறொரு கோளின் வளி­மண்­ட­லத்துள் சென்று தக­வல்­களைப் பூமிக்கு அனுப்­பிய முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.


1987 : மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசின் முன்னாள் பேர­ரசர் ஜீன்-­பெடெல் பொக்­கா­சா­வுக்கு அவ­ரது 13 ஆண்­டு­கால ஆட்­சியில் இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்­காக மர­ண­தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.


1990 : ரஷ்யக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்றம் சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து ரஷ்­யாவின் விடு­த­லையை முறைப்­படி அறி­வித்­தது.


1991 : போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடி­ய­ரசின் ஜனா­தி­ப­தி­யானார்.


1991 : மட்­டக்­க­ளப்பு கொக்­கட்­டிச்­சோ­லையில் 152 தமி­ழர்கள்; படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1994 : இரு என்­ஜின்களை கொண்ட உலகின் மிகப்­பெ­ரிய விமா­ன­மான போயிங் 777 விமானம் முதல் தட­வை­யாக பறந்­தது.


1999 : நேட்டோ தலை­மை­யி­லான ஐ.நா. அமைதிப் படை கொசோ­வோ­வினுள் நுழைந்­தது.


2005 : இலங்­கையில் பிறந்த  அரு­ளா­னந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling  என்ற விளை­யாட்­டினை டொரண்­டோவில் உலக சாத­னைக்­காக 100 மணித்­தி­யா­லங்கள் தொடர்ந்து விளை­யாடி தனது முப்­ப­தா­வது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.


2006 : கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.


2016 : அமெரிக்காவின் ஒர்லண்டோ நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் துப்பாக்கி தாரி ஒருவனின் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதுடன், 53 பேர் காயமடைந்தனர்.

(Visited 83 times, 2 visits today)

Post Author: metro