ஜனா­தி­பதிக்கு சூனியம் செய்­த­தாக நம்­பப்­படும் செப்பு தகடு மீட்பு : என்­மீ­துள்ள அச்சம் கார­ண­மாக சூனியம் வைத்துள்ளனர் – ஜனா­தி­பதி

(புத்­திக விஜே­ய­சூ­ரி­ய-­அ­நு­ரா­த­புரம்)


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சூனியம் செய்­த­தாக நம்­பப்­படும் செப்புத் தக­டு கெபத்­தி­கொல்­லாவ பிர­தான வீதிக்கு அருகில் காணப்­படும் கல்­ல­றைக்கு அரு­கி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

Copper-plate4
இங்­கி­ருந்து மீட்­கப்­பட்ட 10 அடி நீள­மான செம்புத் தகடு ஒன்றில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வட­மத்­திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹேது­ஹா­மிகே நந்­த­சேன, வட மத்­திய மாகாண அமைச்சர் சுசில் குண­ரத்ன, அவ­ரது மகன் துசித குண­ரத்ன, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொது செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான  துமிந்த திஸா­நா­யக்­கவின் சகோ­த­ரர்­க­ளான கவின் திஸா­நா­யக்க, அமில திஸா­நா­யக்க மற்றும் ரவிந்­திர திஸா­நா­யக்க ஆகி­யோரின் பெயர்கள் எழு­தப்­பட்­டுள்­ளன.   

Copper-plate2
குறித்த கல்­ல­றைக்கு அருகில் சூனியம் செய்­வ­தற்கு தேவை­யான பொருட்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் காணப்­பட்­டன. இந்தச்  சம்­பவம் தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

Copper-plate1

குறித்த செம்புத் தகட்டில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் அதன் உண்மைத் தன்மைகள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Copper-plate3

 

Copper-plate

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

என்­மீ­துள்ள அச்சம் கார­ண­மாக சூனியம் வைத்துள்ளனர் – ஜனா­தி­பதி


10_sirisena_g_w-noneஎன்­மீ­துள்ள அச்சம் கார­ண­மாக சூனியம் வைத்­தேனும் என்னை இல்­லா­ம­லாக்க சிலர் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இவ்­வா­றான செயல்­க­ளுக்கு நான் ஒரு­போதும் அச்­சப்­ப­டப்­போ­வ­தில்லை. இதன் கார­ண­மாக நாங்கள் மேலும் வலு­வ­டைவோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.


மேலும் நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய போதுதான் சுயா­தீன தொலைக்­காட்சி சேவை தனது சுயா­தீ­னத்­தன்­மையை இழந்­தது எனவும் தெரி­வித்தார்.


சுயா­தீன தொலைக்­காட்சி ஊடக சேவையின் 38ஆவது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்­னிட்டு புதி­தாக நிர்­மா­ணிக்கப் பட்­டி­ருந்த 5மாடி கட்­டிட தொகு­தியை திறந்­து­வைக்கும் நிகழ்வு பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள சுயாதீன தொலைக்­காட்சி சேவை தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்­றது. 


இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று கையி லேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

(Visited 151 times, 1 visits today)

Post Author: metro