தோல்­விக்கு யாரையும் தனிப்­பட்ட முறையில் குறை­கூ­ற­வேண்டாம் என்­கிறார் மெத்யூஸ் : பிடி தவ­ற­விட்­டமை தோல்­விக்கு கார­ண­மல்ல என்­கிறார் மாலிங்க

(நெவில் அன்­தனி)


ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் தோல்வி அடைந்­த­மைக்கு தனிப்­பட்ட யாரையும் குறை­கூ­ற­வேண்டாம் என அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

Angelo-Matthews

இங்­கி­லாந்தில் சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் கலந்­து­கொண்டு நாடு திரும்­பிய இலங்கை அணி­யினர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் ஊடக சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். அந்தச் சந்­தர்ப்­பத்தில் பேசி­போதே ஏஞ்­சலோ மெத்யூஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


பிடி­களைத் தவ­ற­விட்­ட­தால்தான் தோல்வி அடைய நேரிட்­டதை ஒப்­புக்­கொண்ட அவர், அதற்­காக தனி ஒரு­வரை குறை­கூ­ற­மு­டி­யாது எனவும் முழு அணியும் அதற்கு பொறுப்­பேற்ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

 

சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளாக அசேல குண­ரட்ன, தனஞ்­செய டி சில்வா, தனுஷ்க குண­தி­லக்க ஆகி­யோரை ஏன் கூடு­த­லாகப் பயன்­ப­டுத்­த­வில்லை எனக் கேட்­ட­போது, ‘‘இங்­கி­லாந்து ஆடு­க­ளங்­களில் இம்ரான் தாஹிரை விட வேறு எந்த சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளுக்கும் பெரி­தாக எதையும் செய்­ய­மு­டி­ய­வில்லை.

 

இந்த சுற்றுப் பய­ணத்தின் ஆரம்­பத்தில் சிறப்­பாக செயற்­பட்­ட­போ­திலும் துடுப்­பாட்டம் சரிவு கண்­டது. இரண்­டா­வது போட்­டியில் இந்­தி­யா­வுக்கு எதி­ராக எதிர்­நீச்சல் போட்டு வெற்­றி­யீட்­டி­ய­தா­னது அணியின் கூட்டு முயற்­சி­யாக அமைந்­தது. பலம்­வாய்ந்த இந்­திய அணியின் பந்­து­வீச்­சுக்கு எதி­ராக இளம் வீரர்கள் இருவர் (தனுஷ்க குண­தி­லக்க, குசல் மெண்டிஸ்) சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தா­டி­யமை பாராட்­டுக்­கு­ரி­யது.

 

மூன்­றா­வது வெற்­றி­பெற்றே ஆக­வேண்டும் என்­பதை அறிந்­தி­ருந்தோம். ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அங்கும் இங்கும் சில தவ­று­களை இழைத்தோம். நாங்கள் களத்­த­டுப்பில் சிறப்­பாக செயற்­ப­ட­வில்லை. ஆனால் எமது அணி மோச­மா­ன­தல்ல.

 

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக நாங்கள் சில வாய்ப்­பு­களைத் தவ­ற­விட்டோம். பொது­வாக கிரிக்கெட் போட்­டி­களின் முடி­வுகள் அப்­ப­டித்தான் இருக்கும். தவறு இழைப்­பது என்­பது சகஜம். எதிர்­கா­லத்­திலும் தவறு விடலாம். ஆனால் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த முயற்­சிப்போம். அத்­துடன் தவ­று­க­ளி­லி­ருந்து கற்ற பாடங்­க­ளுடன் முன்­னேற்­றத்தை நோக்கி நகர்வோம்’’ என்றார். 


மாலிங்க கருத்து

மாலிங்­கவின் பந்­து­வீச்சில் பிடிகள் விடு­பட்­டமை குறித்து அவ­ரிடம் கேட்­கப்­பட்­ட­போது, ‘‘நானும் எத்­த­னையோ பிடி­களை விட்­டுள்ளேன். ஆனால் பிடி ஒன்று தவ­ற ­வி­டப்­பட்­டமை தோல்­விக்குக் காரணம் என்று கூற­மு­டி­யாது.

 

அணி என்ற வகையில் நாங்கள் திற­மை­யாக விளை­யா­டினோம். முக்­கிய வேளை­களில் அள­வுக்கு மிஞ்­சிய ஆர்வம் கார­ண­மாக பிடிகள் விடு­பட்­டி­ருக்­கலாம். பிடி எப்­போது தவறும் என்­பதைக் கூற­மு­டி­யாது. நான் விக்கட் எடுக்­கா­விட்டால், நீங்கள் விக்கெட் எடுக்­கா­த­தால்தான் தோல்வி அடைய நேரிட்­டது என யாரும் கூற­மாட்­டார்கள்.

 

ஆனால் பிடியை விட்டால் அத­னால்தான் தோல்வி கிடைத்­தது என்­கி­றார்கள், மேலும் பயிற்­று­நர்­க­ளி­ட­மி­ருந்து நாங்கள் பெறும் பயிற்­சிகள், ஆலோ­ச­னை­களை அரங்கில் நாங்கள் நிறை­வேற்­று­வதே முக்­கியம். நான் 5 விக்­கெட்­களை வீழ்த்­தினார் யாரும் சம்­பவம் குறித்து பேச­மா­ட்­டார்கள், ஆனால் நான் விக்கெட் எடுக்­கா­விட்டால் என்னை ஏசு­வார்கள். அதுதான் உண்மை.

 

அதே­போன்று களத்­த­டுப்பில் பிடி தவ­ற­வி­டப்­பட்டால் பயிற்­று­நரை குறை­காண்­பார்கள். ஆனால் பிடி எடுத்தால் அவ­ரைப்­பற்றி யாருமே வாய்திறப்பதில்லை. பிடியை நான் எடுத்ததால் யாரும் கதைக்கமாட்டார்கள். பிடியை விட்டால் அதுபற்றி பேசுவார்கள். அதுதான் கிரிக்கெட் விளையாட்டின் நியதி. புத்தியுள்ளவர்கள் கிரிக்கெட் விளையாட்டு எத்தகையது என்பதை அறிவார்கள். எனவே சிந்தித்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து விபரிக்கவும்’’ என பதிலளித்தார்.

(Visited 136 times, 1 visits today)

Post Author: metro