சங்கக்கார சதங்களில் சதம்

உலக கிரிக்கெட் அரங்கில் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்­டி­களில் 100 சதங்­களைக் குவித்­த­வர்கள் வரி­சையில் 37ஆவது வீர­ராக இலங்­கையின் குமார் சங்­கக்­கார இணைந்­து­கொண்­டுள்ளார்.

sanga-lead

யோர்­க் ஷயர் அணிக்கு எதி­ராக லீட்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற றோயல் லண்டன் ஒரு நாள் கிண்ண கிரிக்கெட் கால் இறுதிப் போட்­டி­யி­லேயே குமார் சங்­கக்­கார தனது 100ஆவது சதத்தைப் பூர்த்­தி­செய்தார்.


இதன் மூலம் டொனல்ட் பிரட்மன் (117), சச்சின் டெண்­டுல்கர் (142), வில்­லியம் கில்பர்ட் (டபிள்யூ. ஜீ) க்றேஸ் போன்ற கிரிக்கெட் மேதை­க­ளுடன் 100 சதங்கள் குவித்த வீரர்கள் பட்­டி­யலில் குமார் சங்­கக்­கார இணைந்­து­கொண்டார். இங்­கி­லாந்தின் ஜெக் ஹொப்ஸ் 199 சந்­தர்ப்­பங்கள் சதம் குவித்து அதிக சதங்கள் குவித்­த­வர்கள் வரி­சையில் சாத­னை­யா­ள­ராக உள்ளார்.


அப் போட்­டியில் பென் போக்­ஸுடன் (86 ஓட்­டங்கள்) நான்­கா­வது விக்ெ­கட்டில் 180 ஓட்­டங்­களைப் பகிர்ந்த குமார் சங்­கக்­கார 121 ஓட்­டங்­களைக் குவித்தார்.


அப் போட்­டியில் சறே அணி 50 ஓவர்­களில் 7 விக்­கெட்­களை இழந்து 313 ஓட்­டங்­களைப் பெற்­றது. யோர்­க் ஷயர் அணி 50 ஓவர்­களில் 9 விக்­கெட்­களை இழந்து 289 ஓட்­டங்­களைப் பெற்­றது.


இந்த மைல்கல் குறித்து கருத்து வெளி­யிட்ட குமார் சங்­கக்­கார, ‘‘நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மகிழ்­வு­று­கின்றேன். ஆனால், 100 சதங்கள் பற்றி சிந்­திக்­க­வில்லை. ஆனால், நான் களம் நுழையும் போது அது குறித்து எனக்கு நினை­வு­ப­டுத்­தி­னார்கள்’’ என்றார்.


‘‘நான் ஒரு­போதும் என்னை வருத்­திக்­கொண்­ட­தில்லை அல்­லது அழுத்­தத்­திற்கு உள்­ளா­க­வில்லை. அல்­லது குழப்பம் அடை­ய­வு­மில்லை. விளை­யாட்­டுக்கு அப்பால் நல்ல ஓய்வு எடுத்­து­வந்­துள்ளேன்’’ என குமார் சங்­கக்­கார மேலும் குறிப்­பிட்டார்.


‘‘சரேயில் உள்ள அமைப்பு மிகவும் சிறப்­பா­னது. வீரர்­க­ளுக்கு என்ன தேவை என்­பதை அவர் அறிந்­தி­ருந்­தார்கள். சிறந்த வீரர்கள் மற்றும் சிறந்த மனி­தர்­களைக் கொண்ட அணியில் விளை­யா­டு­வ­தென்­பது சம­நி­லையைப் பேணுவதாக அமைகின்றது. விளையாட்டின் பால் அக்கறை செலுத்தவும் புத்தூக்கத்துடன் விளையாடவும் செய்கின்றது’’ என அவர் கூறினார்.

(Visited 100 times, 1 visits today)

Post Author: metro