சகோதரிகள் இருவர் பாம்பு தீண்டி மரணம்: தம்பி மாரடைப்பினால் உயிரிழப்பு குடும்பத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள், துயரம் தாளாது அண்ணன் தற்கொலை

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

ஒரே குடும்­பத்தில் தொடரும் மர­ணங்கள்.. சகோ­த­ரிகள் இருவர் ஏற்­கெ­னவே பாம்பு தீண்டி உயி­ரி­ழந்­துள்ள நிலையில், சகோ­தரன் திடீர் மார­டைப்பால் மர­ண­மாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­பவம் வாகரைப் பிர­தே­சத்தை துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

Death

மட்­டக்­க­ளப்பு – வாகரை 5ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த தெய்­வேந்­திரன் – லோகி­த­ராணி தம்­ப­தி­யி­னரின் குடும்­பத்­துக்கே இந்த தொடர்ச்­சி­யான துயரம் இடம்­பெற்று வந்­துள்­ளது. இவர்­க­ளுக்கு ஏழு பிள்­ளைகள்.

 

அதில் இரண்­டா­வது மக­ளான மோக­ன­ராணி (வயது 16) என்­பவர் உயர்­தரம் கற்றுக் கொண்­டி­ருக்­கும்­போது 1996 ஆம் ஆண்டு பாம்பு தீண்­டி­யதில் மர­ண­மானார்.

 

Death1அதன் பின்னர் அவ­ரது தங்­கை­யான ஷர்­மிகா (09) என்­பவரும் பாம்பு தீண்­டி­யதில் 2001ஆம் மர­ண­ம­டைந்தார்.

 

இந்தி நிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு (08) ‪ தெய்­வேந்­திரன் லோகிதன் வயது (23) தமது மாடு­களை பரா­ம­ரிக்கச் சென்­றவர் இரவு ஒன்­பது மணி­யா­கியும் வீடு திரும்­பா­ததால் அவ­ரது சகோ­த­ர­னான மோக­ன­தரன் (வயது 28) என்­பவர் மாடுகள் கட்­டப்­படும் இடத்­துக்கு சென்று பார்த்­துள்ளார்.

 

Death.jpg1அப்­போது தம்பி உயிர் பிரிந்த நிலையில் வீழ்ந்து கிடந்­துள்ளார். இதனைக் கண்ட துயரம் தாங்­காத அவர் “தம்பி இல்­லாத உல­கத்தில் நான் வாழ மாட்டேன்” எனக் கூறி­ய­வாறு மாடுகள் கட்டும் கயிற்றை எடுத்துக் கொண்டு ஓடி­யவர் அயலில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்­கி­யி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்டார்.

 

மயங்­கிய நிலையில் காணப்­பட்ட அவர் உட­ன­டி­யாக வாகரை மற்றும் வாழைச்­சேனை வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்ட பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.

 

எனினும், அங்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்த நிலையில் நேற்று முன்­தினம் சிகிச்சை பய­னின்றி மர­ண­மானார். இச்­சம்­ப­வங்கள் பற்றி வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான உயிரிழப்புக்கள் வாகரைப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

(Visited 165 times, 1 visits today)

Post Author: metro