நுவ­ரெ­லியா – ஹட்டன் பிர­தான வீதியில் மஞ்சள் கட­வையில் மாண­வியை வாகனம் மோதி­யதில் உயி­ரி­ழப்பு: சட­லத்தை வீதியில் வைத்து ஆர்ப்­பாட்டம்

(க.கிஷாந்தன்,நோட்டன் பிரிட்ஜ் நிருபர், தல­வாக்­கலை கேதீஸ், டீ.சந்­துரு, நுவ­ரெ­லியா நிருபர், சுரேன் – தலவாக்கலை)

நுவ­ரெ­லியா – ஹட்டன் பிர­தான வீதியில் நானு­ஓயா நகரின் பாத­சாரி கட­வையில்  பாதையைக் கடக்க முயற்­சித்த 6 வயது  மாணவி மீது  கன­ரக வாகனம் மோதி­யதில் சிறுமி ஸ்தலத்­தி­லேயே  உயி­ரி­ழந்­துள்ளார்.

 

இந்தச் சம்­ப­வத்­­தை­ய­டுத்து ஆத்­தி­ர­முற்ற பொது­மக்கள்  கன­ரக வாக­னத்­துக்கு தீ வைத்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

Accident

அத்­துடன், சட­லத்தை வீதியில் வைத்­த­ப­டியே பாரிய ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். நுவ­ரெ­லி­யா­வி­லி­ருந்து ஹட்டன் நோக்கி சென்ற கன­ரக வாக­னமே சிறு­மியை மோதிய நிலையில் வாகனம் தீ வைத்து எரிக்­கப்­பட்­டது. இந்தச் சம்­பவம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.


நானு­ஓயா நக­ரத்­தி­லி­ருந்து  நானு­ஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்­கள வித்­தி­யா­ல­யத்­துக்கு செல்­வ­தற்கு பாத­சாரி கட­வையை கடக்க முயன்ற போதே இவ்­வி­பத்து நேர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ரதல்ல கீழ்­பி­ரிவு பகு­தியை சேர்ந்த ஆக்­காஷா தேவ்­மினி என்ற 6 வயது சிறு­மியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.


சிறுமி உயி­ரி­ழப்­புடன் சம்­பவ இடத்தில்  நில­விய பதற்றம் கார­ண­மாக  நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு விசேட அதி­ரடிப் படை­யினர்,  பொலிஸார், இரா­ணு­வத்­தினர் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர்.


இச்­சம்­ப­வத்­தினால் ஹட்டன் நுவ­ரெ­லியா ஊடான பொது போக்­கு­வ­ரத்து பல மணி நேரம் முற்றாக தடைப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

VRA-20170616-m07-MED

(Visited 109 times, 1 visits today)

Post Author: metro