அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் நாடு தழு­விய ரீதியில் போராட்டம் – ஊடக அமைப்­புகள் தெரி­விப்பு

(எம்.சி. நஜி­முதீன்)


ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­விற்கு எதி­ராக அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அல்­லாது போனால் நாடு தழு­விய ரீதியில் எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அகில தெரி­வித்தார்.


Sri-Lanka-Media-Organizationவத்­த­ளையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஊட­க­வி­ய­லா­ளர்­களை தூஷித்­த­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஊடக அமைப்­பு­க­ளுடன் சிவில் அமைப்­பு­களும் இணைந்து ஏற்­பா­டு­செய்த ஆர்ப்­பாட்டம் நேற்று பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்­பாக நடை­பெற்­றது. அ தன் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், கடந்த ஆட்­சியில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக  பல்­வே­று­பட்ட நெருக்­க­டிகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் அப்­போது அவ்­வா­றான ஊடக அடக்கு முறைக்கு  எதி­ராக குரல் கொடுத்­தனர். எனினும் ஆட்­சிக்கு வந்த பின்னர் அவர்கள் ஊடக அடக்­கு­மு­றையில் ஈடு­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.


எனவே ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான கெடு­பி­டிகள் தொடர்பில் அனை­வரும் அதி­ருப்­தியில் உள்­ளனர். இது­தனா அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் ஊடக சுதந்­திரம்? என சகல தரப்­பி­னரும் கேள்வி எழுப்­பு­கின்­றனர். 


ஆகவே அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் நடந்­து ெ­காண்ட முறை அநா­க­ரி­க­மா­ன­தாகும். எனவே அது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிரதமரும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாதுபோனால் ஊடக அமைப்புகள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 59 times, 1 visits today)

Post Author: metro