சர்­வ­தேச ஒலிம்பிக் குழு, ஒழுக்­க­வியல் ஆணைக்­குழு தலைவர் பத­விக்கு பான் கீ மூனின் பெயர் பிரே­ரிப்பு

ban-ki-moonசர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் ஒழுக்­க­வியல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பத­விக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் முன்னாள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் பிரே­ரிக்­கப்­பட்­டுள்ளார்.

சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் நிறை­வேற்­றுக்­குழு சபை­யினால் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

பேரு தேசத்தின் லீமா நகரில் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் பொதுக் கூட்­டத்தில் இந்தப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஒலிம்பிக் நிகழ்ச்­சி­நிரல் 2020 திருத்­தத்­திற்கு அமைய சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் ஒழுக்­க­வியல் ஆணைக்­குழுத் தலை­வரும் அதன் ஏனைய உறுப்­பி­னர்­களும் சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் பொதுக் கூட்­டத்தில் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும்.

இந்தப் பிரே­ரணை நிறை­வே­றினால் தற்­போ­தைய ஒழுக்­க­வியல் ஆணைக்­குழுத் தலைவர் யூசுபா எண்­டி­யா­யேயின் இடத்தை பான் கீ மூன் நிரப்­புவார்.

Olympicsசெனகல் தேசத்தின் முன்னாள் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றத்தின் தலை­வ­ரான எண்­டி­யாயே அடுத்து வரும் பொதுக்­கூட்­டத்­துடன் தனது பதவி­யி­லி­ருந்து வில­க­வுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் எட்­டா­வது செய­லாளர் நாய­க­மாக பான் கீ மூன் 2007 ஜன­வ­ரி­யி­லி­ருந்து 2016 டிசம்­பர்­வரை பதவி வகித்தார்.

 ‘‘சர்­வ­தேச ஒலிம்பிக் ’குழுவின் ஒழுக்­க­வியல் ஆணைக்­குழு தலைவர் பத­விக்கு என்னைப் பிரே­ரித்­துள்­ளமை குறித்து நான் பெருமை அடை­கின்றேன்.

இந்தப் பத­வியை பணி­வு­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் ஏற்கத் தயா­ரா­க­வுள்ளேன். சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் பொறுப்பு டைமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த என்னாலான சகலதையும் செய்வேன்’’ என பான் கீ மூன் தெரிவித்தார்.

(Visited 40 times, 1 visits today)

Post Author: metro