ஆற்றிலிருந்து தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட பெண் – பிடி­வி­றாந்து கார­ண­மாக பொலி­ஸாரால் கைது

kimberly-hayfordஅமெ­ரிக்­காவில், ஆறு ஒன்றில் தத்­த­ளித்த பெண் ஒரு­வரை தீய­ணைப்புப் படை­யினர் காப்­பாற்­றிய பின்னர், ஏற்­கெ­னவே பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த பிடி­வி­றாந்து கார­ண­மாக அப்பெண் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். 


மேய்ன் மாநி­லத்தின் லிமிங்டன் நக­ரி­லுள்ள ஆற்றில் கடந்த சனிக்­கி­ழமை இரவு பெண் ஒருவர் தத்­த­ளித்துக் கொண்­டி­ருப்­ப­தாக அவ­சர சேவைப் பிரி­வி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. 


அதை­ய­டுத்து தீய­ணைப்புப் படை­யினர் விரைந்து வந்து அப்­பெண்ணை காப்­பாற்றி நதிக்­க­ரைக்கு கொண்­டு­வந்­தனர். 


ஆனால், அப்­பெண்ணின் அடை­யாள ஆவ­ணங்­களை பொலிஸார் ஆராய்ந்­த­போது, அவரை கைது செய்­வ­தற்கு ஏற்­கெ­னவே நீதி­மன்­றினால் பிடி­வி­றாந்து பிறக்­கப்­பட்­டி­ருந்­தமை தெரி­ய­வந்­தது.  

 

அதை­ய­டுத்து அப்­பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.  37 வயதான கிம்பர்லி ஹேபோர்ட் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

(Visited 53 times, 1 visits today)

Post Author: metro