2028 நட்சத்திர ஆமைகள் சிக்கின

(மதுரங்குளி நிருபர்)


கற்பிட்டி இப்­பந்­தீவு மற்றும் சின்ன அரிச்சால் பிர­தே­சத்­துக்­கி­டை­யி­லான கடற்பகுதியில் படகு ஒன்றில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்டு வரப்­பட்டுக் கொண்­டி­ருந்த 2028 நட்­சத்­திர ஆமை­க­ளுடன் இரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக கடற்­ப­டை­யினர் தெரி­வித்­தனர். 

Kalpitiy-1

கடற்­ப­டை­யி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற புல­னாய்வுத் தகவல் ஒன்­றை­ய­டுத்து நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போதே இச்­சந்­தேக நபர்கள் இவ்­வாறு ஆமை­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.


இந்த ஆமைகள் படகு மூல­மாக இந்­தி­யா­வி­லி­ருந்து இந்­நாட்­டிற்கு கொண்டு வரப்­பட்டுக் கொண்­டி­ருக்­கலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

கடற்­ப­டை­யினர் குறித்த பட­கி­லி­ருந்து கைப்­பற்­றிய எட்டு பயணப் பைக­ளி­லி­ருந்து 2089 நட்­சத்­திர ஆமைகள் இருந்து அவை மீட்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

Kalpitiy-2

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கைற்­றப்­பட்ட நட்­சத்­திர ஆமை­கள்இ படகு மற்றும் ஏனைய உப­க­ர­ணங்­க­ளோடு கல்­பிட்டி கடற்­படை முகா­முக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சின்னப்பாடு சுங்க திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

(Visited 110 times, 1 visits today)

Post Author: metro