இரு அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாத போதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே குழப்பங்களுக்கு காரணம் – வடமாகாண முதலமைச்சருக்கு இரா. சம்பந்தன் விளக்கக் கடிதம்

எமக்கு முன்னால் உள்ள பிரச்­சி­னையை மட்­டுமே நான் கையா­ளுவேன்.  விசா­ரணைக் குழு­வினால் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டாத இரண்டு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ரான தண்­டனைச் செயற்­பாடு நியா­யப்­ப­டுத்தக் கூடி­யதா என்­பதே அது.  இரண்டு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ராக, அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டா­த­போ­திலும் நீங்கள் மேற்­கொண்ட தண்­டனை நட­வ­டிக்­கையே தற்­போ­தைய குழப்­பங்கள் எழக் கார­ண­மா­கி­யுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான  இரா.சம்­பந்தன் வட மாகாண முத­ல­மைச்சர் சீ.விக்­னேஸ்­வ­ர­னுக்கு  அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.


sampanthan23மேலும் அந்தக் கடி­தத்தில் தெரி­வித்­துள்­ள­தா­வது,  உங்­களைச் சந்­தித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மூன்று கட்சித் தலை­வர்­க­ளி­னதும் ஆலோ­ச­னைக்கு அமை­வாக, ஏதேனும் விசா­ர­ணை­யின்­போது இரண்டு அமைச்­சர்­க­ளி­னதும் நடத்தை தொடர்­பாக நான் ஓர் உத்­த­ர­வா­தத்தைத் தந்தால், குறித்த அமைச்­சர்கள் இருவர் தொடர்­பான திருத்த நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலை­வர்­களும் ஆத­ரிப்­பார்கள் என்ற ஆலோ­ச­னையைக் கூறி­யுள்­ளீர்கள்.


விசா­ரணை தொடர்­பாக இரண்டு அமைச்­சர்­க­ளி­னதும் நடத்­தை­யை­யிட்டு நான் உத்­த­ர­வா­த­ம­ளிக்க வேண்­டு­மென்று எவ்­வாறு ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை என்னால் விளங்கிக் கொள்ள முடி­ய­வில்லை.

 

அத்­த­கைய உத்­த­ர­வா­த­மொன்றை நிச்­ச­ய­மாக நான் தரப்­போ­வ­தில்லை.  நான் ஏற்­கெ­னவே தெரி­வித்­தி­ருந்­த­படி இயற்கை நீதிக் கோட்­பா­டு­க­ளுக்கு மாறான தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கையின் தொடர்ச்­சி­யாக மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­நி­லை­மையைச் சீர்­செய்­வ­தற்­கா­கவே நான் எனது ஒத்­து­ழைப்பை நல்க முயற்­சிக்­கின்றேன்.

எனினும், ஒரு சட்­ட­ரீ­தி­யான, சுதந்­தி­ர­மான விசா­ர­ணைக்குத் தடைகள் எத­னையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என நான் குறித்த இரு அமைச்­சர்­க­ளுக்கும் நிச்­ச­ய­மாக ஆலோ­சனை கூறுவேன்.

 

இந்த விடயம் மேலும் தாம­தப்­ப­டுத்தக் கூடி­ய­தென நான் கரு­த­வில்லை.  ஆதலால் தாங்கள் தாம­த­மின்றிச் செயற்­பட வேண்டும்.


இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­பா­டு­களில் எனது செல்­வாக்கைச் செலுத்த வேண்­டிய தேவை­யுள்­ள­தாகத் தாங்கள் குறிப்­பிட்­டுள்­ளீர்கள்.  இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ராக  மாவை சேனா­தி­ரா­ஜாவும் தற்­போ­தைய செய­லாளர் நாய­க­மாக   கே.துரை­ரா­ஜ­சிங்­கமும்   உள்­ளனர்.  

 

இ.த.அ.கட்­சியின் மத்­திய செயற்­குழு ஒழுங்­காகக் கூடு­கின்­றது.  நான் இ.த.அ.கட்­சியின் ஒரு சிரேஷ்ட உறுப்­பினர் என்­ப­தோடு, ஒரு காலத்தில் அதன் தலை­வ­ரா­கவும் இருந்தேன்.  தந்தை செல்­வ­நா­யகம் அவர்கள் தலை­மை­தாங்­கிய இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியும், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுமே எப்­பொ­ழுதும் எனக்கு உரித்­தான அர­சியல் இயக்­கங்­க­ளாகும். 


வடக்கு மாகா­ணத்­துக்­கான முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராகத் தங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்து அதனைத் தங்­க­ளுக்குத் தெரி­வித்­த­வே­ளையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எல்லாத் தலை­வர்­களின் முன்­பா­கவும்  மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் நீங்கள் கூறி­னீர்கள், வட­மா­காண சபையின் நிர்­வா­கத்தை நடத்திச் செல்­வதில் அவ­ரது வழி­காட்­டலும் அர­சியல் ஆலோ­ச­னை­களும் உங்­க­ளுக்குத் தேவைப்­படும் என்­ப­தாக இது அவ்­வாறே நிறை­வேற்­றப்­பட்­டதா என்­பதைச் சில­வேளை நீங்கள் உங்­க­ளையே கேட்டுக் கொள்­ளலாம். மாவை சேனா­தி­ராஜா எமது மக்­க­ளுக்­கா­கவும் கட்­சிக்­கா­கவும் பல தியா­கங்­களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார்.  இத்தகைய பெறு மதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.  


எவ்­வா­றா­யினும், இ.த.அ.கட்­சியின் செயற்­பா­டு­களில் எனது சாத­க­மான செல்­வாக்கைப் பிர­யோ­கிக்க முய­லுவேன் என்ற உத்­த­ர­வா­தத்தை உங்­க­ளுக்குத் தரு­கின்றேன். தங்­களால் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்ள திருத்த நட­வ­டிக்­கைகள் தாம­தி­யாது எடுக்­கப்­பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro